“இந்தியா பங்களாதேஷை ஈஸியா முடிச்சிரும்”…தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்!
பங்களாதேஷ் அணி பார்மில் இருந்தாலும் இந்திய அணிக்குச் சவாலாக இருக்காது என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின், முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் விளையாட இரண்டு அணி வீரர்களும், பயிற்சிகளையும் தொடங்கியுள்ளனர்.
வங்கதேச அணி, இதற்கு முன் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை வென்று சாதனை படைத்திருந்தது. எனவே, இதன் காரணமாக, பங்களாதேஷ் அணி கண்டிப்பாக, இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்குச் சவாலாக அமைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் வெளிப்படையாகப் பேசி வருகிறார்கள்.
அந்த வகையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில், பங்களாதேஷ் அணி பார்மில் இருந்தாலும் இந்திய அணிக்குச் சவாலாக இருக்கமாட்டார்கள் என வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர் ” இந்திய அணியை இந்தியாவில் தோற்கடிக்கவேண்டும் என்றால் அது பெரிய பணி. அதனை நிச்சியமாக எளிதாகச் செய்யமுடியாது என்பதைச் சுட்டிக்காட்டினார். தனிப்பட்ட முறையில், பங்களாதேஷ் இந்தியாவுக்குச் சவாலாக இருக்கும் என்று தான் நினைக்கவில்லை எனவும், பாகிஸ்தானில் வங்கதேசம் சிறப்பாக விளையாடியிருந்தாலும், அவர்கள் இந்தியாவை வீழ்த்த முடியாது.
பங்களாதேஷ் அணியை வீழ்த்த இது சரியான நேரம் என யோசித்து இந்திய அணி போட்டியை வேகமாகவும், ஈஸியாகவும் முடிக்க முயற்சி செய்யும் ” என தன்னுடைய பணியில் தினேஷ் கார்த்தி கூறினார். தொடர்ந்து பேசிய தினேஷ் கார்த்திக் இந்திய இந்த டெஸ்ட் தொடரில் இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களுடன் விளையாடப்போவது பற்றியும் தன்னுடைய கருத்தை தினேஷ் கார்த்திக் கூறினார்.
அதுபற்றி பேசிய அவர் ” இந்திய அணி கண்டிப்பாக ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை வைத்து விளையாடுவார்கள் என்று நான் நினைக்கிறேன். அப்படி விளையாடினாள் கண்டிப்பாக அது அணியின் பந்துவீச்சுக்கு முக்கிய பக்க பலமாக இருக்கும்” எனவும் தெரிவித்துள்ளார்.