இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே இன்று முதல் டி-20 போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக விளையாடி 20 ஓவர் முடிவில் 207அடித்தனர். இதில் அதிகபட்சமாக ஹெட்மையர் 56 ரன்கள் குவித்தார். இந்திய அணி சார்பில் யுஸ்வேந்திர சாஹல் 2 விக்கெட்டைபறித்தார்.
இதைத் தொடர்ந்து 208 ரன்களுடன் களமிறங்கிய இந்திய அணி ஆட்டம் தொடக்கத்திலேயே தொடக்க வீரர் ரோகித் சர்மா 8 ரன்களில் வெளியேற பின்னர் கே.எல் ராகுல் , விராட் இருவரும் கூட்டணியில் இனைந்து அணி எண்ணிக்கையை உயர்த்தினார். நிதானமாக விளையாடிய கே.எல் ராகுல் அரைசதம் அடித்து 62 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
பின்னர் இறங்கிய ரிஷப் பண்ட் நிலைத்து நிற்கவில்லை. இதைத்தொடர்ந்து சிறப்பாகவும் , அதிரடியாகவும் விளையாடிய விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர்களின் பந்துகளை பறக்கவிட்டார்.
இந்நிலையில் விராட்கோலி கடைசிவரை களத்தில் நின்று 50 பந்தில் 94 ரன்கள் குவித்தார். அதில் 6 சிக்சர்,6 பவுண்டரி அடங்கும் .இதன் மூலம் இந்திய அணி 18.4 ஓவர்களில் 209 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…