தொடர் தோல்வியை சந்தித்தாலும் இந்தியா புள்ளி பட்டியலில் முதலிடம்
சமீபத்தில் இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் , டி20, மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணி டி20 தொடரில் நியூசிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்து தொடரை கைப்பற்றியது.
அதன்பிறகு விளையாடிய ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இந்திய அணியை நியூசிலாந்து அணி ஒயிட் வாஷ் செய்து தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இதுவரை இந்திய அணி 9 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகளையும் , 2 தோல்விகளையும் பெற்றுள்ளது.
இதனால் புள்ளிப்பட்டியலில் 360 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. 296 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணியும் , நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 180 புள்ளிகளுடன் 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
இதற்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து, பாகிஸ்தான் , இலங்கை , தென் ஆப்பிரிக்கா அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.