டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர் விளாசி அணிகளில் இந்திய முதலிடம் ..!
தென்னாபிரிக்கா , இந்தியா இடையே முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 502 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது.பின்னர் இறங்கிய தென்னாபிரிக்க அணி 431 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது பின்னர் 71 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்க இந்திய அணி 323 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது. மூலம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு 395இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில் ஒரு டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணிகளில் இந்திய அணி தற்போது முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 27 சிக்சர்களை விளாசி உள்ளது. இதற்கு முன் கடந்த 2014 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 22 சிக்சர்களை அடித்தது அதுவே அதிகபட்ச சிக்சராக இருந்தது. தற்போது அந்த சாதனையை இந்திய அணி முறியடித்துள்ளது.