இலங்கை கிரிக்கெட் அணியில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் வருகின்ற 13-ஆம் தேதி நடைபெறவிருந்த ஒரு நாள் போட்டி 18-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இலங்கை தொடரில் அனுபவம் வாய்ந்த வீரரான ஷிகர் தவான் கேப்டனாகவும், துணை கேப்டனாக புவனேஷ் குமாரும் செயல்படவுள்ளனர்.
இதில் ஒரு நாள் போட்டி வருகின்ற ஜூலை 13- ஆம் தேதி முதல் தொடங்கி ஜூலை 18- ஆம் தேதியும், டி 20 போட்டி ஜூன் 21 ஆம் தேதி முதல் தொடங்கி ஜூலை 25 ஆம் தேதி முடிவடைவதாக இருந்தது. இந்த நிலையில், இங்கிலாந்தில் இருந்து இலங்கை திரும்பிய வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த பரிசோதனையில், இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிரான்ட் பிளவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார். இலங்கை அணியை சேர்ந்த மேலும் ஒருவருக்குதொற்று உறுதி செய்யப்பட்டது. அவரை தொடர்ந்து இலங்கை அணியின் தரவு பகுப்பாய்வாளர் ஜி.டி.நிரோஷனுக்கு கொரோனா தொற்று உறுதியானது
இதனால் வீரர்களுக்கான வழக்கமான தனிமைப்படுத்தும் காலத்தைக் கூடுதலாக 3 நாட்கள் நீடித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இந்த நிலையில், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா போட்டியின் தேதி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சமீபத்தில் ஊடகத்திற்கு பேட்டியளித்த ஜெய் ஷா கூறியதாவது, ” இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரும் 13ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் இலங்கை அணியில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் 5 நாட்கள் தாமதமாக வரும் 18ஆம் தேதி தொடங்கும். 2-வது போட்டி 20- ஆம் தேதியும், 3-வது போட்டி 23-ஆம் தேதியும் நடக்கும். டி20 போட்டி 25, 27, 29 ஆம் தேதிகளில் நடக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் : அணியில் பந்துவீச்சில் தூண் என்றால் லெக்-ஸ்பின்னர் ரஷித் கான் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அணியின் வளர்ச்சிக்கு…
சென்னை : மும்மொழிக் கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் "பெரியார், அண்ணா, கலைஞர்…
சென்னை : தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் மாய்ந்த திருமலர், திருமஞ்சு, செண்பகம் ஆகியோரின்…
சென்னை : ஒவ்வொரு நடிகருக்கும் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மிகப்பெரிய ஹிட் படங்களாக ஒரு படம் இருக்கும் என்பது…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் (EU) அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார். அதிகமாக,…
லாகூர் : நடந்து கொண்டு இருக்கும் இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறியது ரசிகர்களுக்கும் அணி…