கொரோனாநோயால் இந்தியாவும், பாகிஸ்தானும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தடுக்க மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.இதனால் பலரின் வாழ்வாதாரம் முடங்கி உள்ளது. அவர்களுக்கு உதவுவதற்காக இந்தியா , பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கோரிக்கை வைத்துள்ளார்.
சோயிப் அக்தர் கூறுகையில் , கொரோனா பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் நிதி திரட்ட இந்தியா, பாகிஸ்தான் இடையே மூன்று போட்டிகள் கொண்ட தொடரை நடத்த வேண்டும். இந்த போட்டிகளின் முடிவு எதுவாக இருந்தாலும் இரு நாட்டினரும் கவலைப்படமாட்டார்கள்.
விராட் கோலி சதம் அடித்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். பாபர் அசாம் சதம் அடித்தால் நீங்கள் உற்சாகமடையுங்கள். இதன் மூலம் கிடைக்கும் வருவாயை இரு நாடுகளின் கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு பணிகளுக்கு பகிர்ந்து கொள்ளலாம் என கூறினார்.
மேலும் ரசிகர்கள் இல்லாமல் மைதானத்தில் இந்த போட்டியை நடத்தலாம். இப்போது அனைவரும் வீட்டிலேயே இருப்பதால் டி.வி மூலம் அதிக பார்வையாளர்களை ஈர்க்க முடியும். ஆனால் தற்போது இந்த போட்டியை நடத்த முடியாது. தற்போது இருக்கும் நிலைமையில் இருந்து முன்னேற்றம் காணப்படும்போது இந்த தொடரை துபாய் போன்ற இடத்தில் நடத்தலாம் என அக்தர் கூறினார்.
2007-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையே உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும் மோதி வருகின்றன.
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…