இந்தியா-பாகிஸ்தான் கால்பந்து போட்டி..! இரு அணி வீரர்கள் மோதல்..! வைரலாகும் வீடியோ..

Two team players clash

இந்தியா-பாகிஸ்தான் கால்பந்து வீரர்கள் போட்டியின் போது மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் லீக் போட்டி (SAFF) பெங்களுருவில் நேற்று நடைபெற்றது. இதில் குரூப்-ஏ பிரிவின் இந்தியா- பாகிஸ்தான் மோதிய ஆட்டத்தின் முதல் பாதியில் 10வது மற்றும் 15வது நிமிடத்தில் சுனில் சேத்ரி கோல்கள் அடிக்க(பெனால்டி உட்பட), முதல் பாதியின் முடிவில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கி 30 நிமிடம் கழித்து சுனில் மேலும் ஒரு கோல் அடிக்க, நான்காவது கோலை உடான்டா சிங் அடித்தார். மேற்கொண்டு பாகிஸ்தான் அணியை ஒரு கோலும் அடிக்க விடாமல் இந்தியா ஆட்டத்தின் முடிவில் 4-0 என தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

இதற்கிடையில், போட்டியின் முதல் பாதியின் பிற்பகுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கால்பந்து வீரர்கள்மோதலில் ஈடுபட்டுள்ளனர். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக், பாகிஸ்தான் வீரர் ஒருவரிடமிருந்து கால்பந்தைப் பறிக்க முயன்றுள்ளார்.

இதனால் இந்திய மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின், போட்டி அதிகாரிகள் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்தினர். இதன் விளைவாக, இகோர் ஸ்டிமாக்குக்கு சிவப்பு அட்டையும், பாகிஸ்தான் பயிற்சியாளர் ஷாஜத் அன்வருக்கு மஞ்சள் அட்டையும் காட்டப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்