INDVSSA: அடுத்தடுத்த விக்கெட்கள் இழந்து தடுமாறும் இந்தியா!

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் கிரிக்கெட் போட்டி செஞ்சுரியனில் இருக்கும் சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே சோகமாக அமைந்துள்ளது. ஏனென்றால், இந்திய அணி தொடர்ச்சியாக தங்களுடைய விக்கெட்களை இழந்துள்ளது. அதன்படி, முதலில் கேப்டன் ரோஹித் ஷர்மா 4.6 ஓவரில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து அட்டமிழந்து வெளியேறினார்.
மழையால் பாதியில் நின்ற “பாக்சிங் டே டெஸ்ட்” போட்டி…!
அவரை தொடர்ந்து அடுத்ததாக 9.4 ஓவர்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 17 ரன்கள் எடுத்து அட்டமிழந்து வெளியேறினார். அவருக்கு அடுத்த படியாக 11.1 ஓவரில் சுப்மன் கில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து அட்டமிழந்து வெளியேறினார். அடுத்தடுத்து விக்கெட் விழுந்த காரணத்தால் தற்போது இந்திய அணி தடுமாறி வருகிறது. களத்தில் விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் விளையாடி வருகிறார்கள்.
விளையாடும் வீரர்கள் :
இந்தியா :
ரோஹித் சர்மா (C), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (WK), ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா
தென்னாப்பிரிக்கா அணி
டீன் எல்கர், ஐடன் மார்க்ரம், டோனி டி சோர்ஜி, டெம்பா பவுமா(C), கீகன் பீட்டர்சன், டேவிட் பெடிங்காம், கைல் வெர்ரேய்ன்(WK), மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, ககிசோ ரபாடா, நந்த்ரே பர்கர்
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025