2023 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது இந்த போட்டியில்ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் இந்தியாவின் கனவு தகர்க்கப்பட்டு ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி உலக சாம்பியன் ஆனது.
தோல்விக்கு நடுவர் ரிச்சர்ட் கேட்டில்பரோ காரணம்:
இந்திய அணியின் தோல்விக்கு நடுவர் ரிச்சர்ட் கேட்டில்பரோ காரணம் என ரசிகர் ட்ரோல் செய்து வருகின்றனர். இறுதிப் போட்டியில் கெட்டில்பரோவின் சில முடிவுகள் இந்தியாவுக்கு ஆபத்தாக முடிந்தது. இறுதிப்போட்டியில் மார்னஸ் லாபுஷாக்னேவுக்கு எதிரான எல்பிடபிள்யூ- விற்கு அவுட் இல்லை என தெரிவித்தார். உடனே இந்திய அணி ரிவ்யூ செய்தது. ஆனால் அது நடுவரின் அழைப்பாக (umpiers call ) மாறியது.
அந்த நேரத்தில் மார்னஸ்-க்கு அவுட் கொடுத்திருந்தால் இந்தியா வெற்றி கிடைத்திருக்கும் என ரசிகர்கள் தெரிவித்தனர். ரிச்சர்ட் கேட்டில்பரோ பெரிய போட்டிகளில் நடுவராக இருக்கும் போதெல்லாம் இந்தியாவுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்ததாக ரசிகர்கள் நம்புகிறார்கள்.
இந்தியாவின் தோல்விக்கும் நடுவர் ரிச்சர்ட்டுக்கும் இடையேயான தொடர்பு:
கடந்த 2014 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி இலங்கைக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் 2015 உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய அணி தோல்வியடைந்தது. 2016 டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் இந்திய அணி தோற்கடிக்கப்பட்டது. சாம்பியன்ஸ் டிராபி 2017 இல், இந்திய அணி அற்புதமாக விளையாடியது. இறுதிப் போட்டியை எட்டியது ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2019 உலகக்கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்திற்கு எதிராக தோல்வியடைந்தது. பின்னர் 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தோல்வியடைந்துள்ளது. இந்திய அணி தோல்வியடைந்த இந்த அனைத்துபோட்டியிலும் ஆன்-பீல்ட் அம்பயராக ரிச்சர்ட் கெட்டில்பரோ இருந்து உள்ளார். இதனால் ரிச்சர்ட் கெட்டில்பரோ நடுவராக இருக்கும்போது இந்திய அணி ஒருமுறை கூட கோப்பையை கைப்பற்ற முடியவில்லை. நடுவர் ரிச்சர்ட் கெட்டில் ராசியில்லாத நடுவர் என இந்திய ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவின் தோல்விக்கும் நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோவுக்கும் இடையேயான தொடர்பு 2014 ஆம் ஆண்டில் தொடங்கி இன்றுவரை தொடர்கிறது. இதில் குறிப்பாக 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய அணியின் தோனி ரன் அவுட்டான போது ரிச்சர்ட் கெட்டில்பரோ கொடுத்த ரியாக்ஷன் இன்று வரை ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாகும்.
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…