ஜப்பானை வீழ்த்தி ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்தியா ..!

Published by
murugan

மகளிருக்கான 7-வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் மைதானத்தில் கடந்த அக்டோபர் 27-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு சாம்பியன் ஜப்பான், 3 முறை சாம்பியனான தென்கொரியா, முன்னாள் சாம்பியனான இந்தியா மற்றும் சீனா, மலேசியா, தாய்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்றனர்.

இதற்கிடையில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டிகளில் இந்திய அணியும், ஜப்பான் அணியும் வெற்றி பெற்றன. முதல் அரையிறுதியில் ஜப்பான் 2-1 என்ற கோல் கணக்கில் சீனாவையும், இரண்டாவது அரையிறுதியில் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் கொரியாவையும் வீழ்த்தியது.

இதைத்தொடர்ந்து இன்று நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணியும், ஜப்பான் அணியும் மோதியது. இப்போட்டியில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியனான ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில், ஜார்க்கண்ட் மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ராஞ்சி 2023-ல் வெற்றிபெற்ற அணியின் அனைத்து வீராங்கனைகளுக்கும் தலா ரூ. 3 லட்சமும், அனைத்து துணை ஊழியர்களுக்கும் தலா ரூ.1.5 லட்சமும் வழங்கப்படும் என ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது.

 

Published by
murugan
Tags: #JWACT2023

Recent Posts

CSK vs SRH : பந்துவீச்சில் மிரட்டிய ஹைதராபாத்! தடுமாறிய சென்னை ‘ஆல் அவுட்’! 155 டார்கெட்!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…

12 minutes ago

அரைக்கம்பத்தில் தேசியக்கொடி! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது! – தமிழக அரசு.

சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ்  கடந்த…

1 hour ago

CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…

2 hours ago

இபிஎஸ் தலைமையில் மா.செ கூட்டம்.! முதல் வரிசையில் செங்கோட்டையன்!

சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…

3 hours ago

இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! மோப்பநாய் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரம்…

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…

4 hours ago

“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

4 hours ago