பிஃபா உலகக்கோப்பைக் கால்பந்து 2026 தகுதிச் சுற்றுப் போட்டிகள் குவைத்தில் நடந்து வருகின்றன. இதில் குரூப்-ஏ பிரிவில் இரண்டாவது சுற்று தகுதிச் சுற்று ஆட்டம், குவைத் நகரில் உள்ள 60,000 இருக்கைகள் கொண்ட ஜாபர் அல்-அஹ்மத் சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று (16.11.2023) நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா மற்றும் கத்தார் அணிகள் மோதியது.
ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணிகளும் கோல் அடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது. முதல் பாதியில் இந்திய அணி தனக்குக் கிடைத்த இரண்டு வாய்ப்புகளைத் தவறவிட்டது. முதலில் 18வது நிமிடத்தில் சாஹல் அப்துல் சமத் ஷூட்டிங் வாய்ப்பைத் தவறவிட 27வது நிமிடத்தில் ஆகாஷ் மிஸ்ரா ப்ரீகிக் அசிஸ்ட் மூலம் தனக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிட்டார்.
குவைத் அணியும் முதல் பாதியின் முடிவில் கோல் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டதால், இரண்டாவது பாதி ஆட்டத்தை இந்தியா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து சிறப்பான முறையில் ஆடத் தொடங்கியது. இருந்தும் குவைத் அணி, இந்திய அணிக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தது.
ஆனால் குவைத்தின் தடைகளைத் தாண்டி, இந்தியாவின் மன்வீர் சிங் 75வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அணியை முன்னிலைக்குக் கொண்டு சென்றார். தொடர்ந்து குவைத் அணி முயற்சி செய்தும், இந்தியா கோல் அடிக்கும் வாய்ப்பை விட்டுக்கொடுக்கவில்லை. இரண்டாம் பாதி முடியும் வேளையில் குவைத்தின் பைசல் ஜெய்த் அல்-ஹர்பி சிகப்பு அட்டைக் கொடுக்கப்பட்டு வெளியேறினார்.
இறுதியில் குரூப் ஏ பிரிவின் 2வது சுற்று போட்டி 1-0 என்ற கோல் கணக்கில் முடிவடைந்தது. இதன் மூலம் இந்திய கால்பந்து அணி, இந்த ஆண்டு குவைத்துக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்தது. முன்னதாக ஜூலை மாதம் நடந்த 2023 எஸ்ஏஎஃப்எஃப் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், குவைத் – இந்தியா மோதியது. முழு நேரத்தில் 1-1 என்ற கணக்கில் இருந்ததால், பெனால்டியில் 5-4 என்ற கணக்கில் குவைத்தை இந்தியா தோற்கடித்தது.
மேலும், புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடக்கும் இரண்டாவது குரூப் ஆட்டத்தில் நவம்பர் 21ம் தேதி, இந்தியா உலகின் 61வது இடத்தில் உள்ள கத்தாரை எதிர்கொள்கிறது. இந்திய கால்பந்து அணி, ஆசிய சாம்பியனான கத்தார், குவைத் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
நான்கு அணிகளும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ரவுண்ட்-ராபின் முறையில் விளையாடும். இதில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிஃபா உலகக் கோப்பை 2026 ஏஎப்சி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறும். அதே வேளையில் 2027 ஏஎப்சி ஆசியக் கோப்பையில் நேரடியாக நுழையும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரவை பலரும் வெறுக்கும் உணவாக இருந்தாலும் அது ஒரு சிறந்த சிற்றுண்டி எனலாம் . அதன் ஆரோக்கிய நன்மைகளை இந்த…
டோக்கியோ: திபெத், நேபாளத்தை தொடர்ந்து, ஜப்பானிலும் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு ஜப்பானில் உள்ள டோரிஷிமா தீவுப்…
ஈரோடு : இந்திய தேர்தல் ஆணைய தலைமை அதிகாரி ராஜீவ் குமார் தற்போது 70 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட டெல்லி…
டெல்லி : தலைநகர் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மியின் ஆட்சி காலம் அடுத்த மாதம் நிறைவடைய உள்ள நிலையில், டெல்லியில்…
நீலகிரி : சீனாவில் 14 வயதுக்குட்பட்டோரை அதிகம் பாதித்துள்ள HMP வைரஸ் தொற்றானது இந்தியாவிலும் சிலருக்கு உறுதியாகியுள்ளது என தகவல்கள் வெளியாகின.…
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக…