தென் ஆப்ரிக்காவில் 19 வயது உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இன்று செமி-பைனல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதியது.
இப்போட்டி போட்செஃப்ஸ்ட்ரூமில் உள்ள சென்வெஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் இறங்கிய பாகிஸ்தான் அணி 43.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே அடித்தனர்.
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஹைதர் அலி (56), ரோஹைல் நசீர் (62) ரன்கள் அடித்தனர். இந்திய அணியில் சுஷாந்த் மிஸ்ரா 3 விக்கெட்டும் , கார்த்திக் , ரவி பிஷ்னோய் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
173 ரன்கள் இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷ்வி ஜெய்ஸ்வால் ,
திவ்யான்ஷ் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் விளாசினார். இவர்கள் இருவரின் கூட்டணியை பிரிக்கமுடியாமல் பாகிஸ்தான் அணி பந்து வீச்சாளர்கள் திணறினர்.
இருவரும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் யஷ்வி ஜெய்ஸ்வால்(105*), திவ்யான்ஷ்(59*) ரன்களுடன் இருந்தனர். இதனால் இந்திய அணி 35.2 ஓவரில் 176 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நேரடியாக பைனலுக்கு சென்றது.பைனல் போட்டி வருகின்ற 09-ம் தேதி நடைபெற உள்ளது.
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…
தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4,…
சென்னை : நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலாக்கத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம்…
சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தங்கள் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து சென்னை…