ஆண்கள் ஹாக்கி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா..!

Default Image

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியில் நியூசிலாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவானது கோலாகலாமாக ஆரம்பித்தது.டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது.

இந்நிலையில்,இன்று காலை நடைபெற்ற ஆண்கள் ஹாக்கி போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் மோதின. போட்டி தொடங்கிய 6-வது நிமிடத்திலேயே நியூசிலாந்து தனது முதல் கோலை அடித்து இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

இதனையடுத்து,10-வது நிமிடத்தில் இந்திய வீரர் ருபிந்தர் பால் சிங் இந்திய அணி சார்பாக முதல் கோல் அடித்து,1-1 என கணக்கில் ஆட்டத்தை சமன் செய்தார்.இதனைத் தொடர்ந்து,கேப்டன் மன்பிரீத் சிங் 26 மற்றும் 33 வது நிமிடங்களில் தொடர்ச்சியான பெனால்டி கார்னர்களை அடித்தார்.

இதற்கிடையில்,நியூசிலாந்து 27-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது. இதனால் 3-வது காலிறுதி ஆட்டம் முடிவில் இந்தியா 3-2 என முன்னிலை பெற்றது.4-வது காலிறுதியில் இரு அணிகளும் கோல் அடிக்காத காரணத்தினால் இந்தியா 3-2 என கணக்கில் வெற்றி பெற்றது. இதனால்,டோக்கியோவில் இந்த முறை இந்தியர்கள் ஒரு பிரகாசமான பதக்கத்தை வெல்வார்கள் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

ஹாக்கி அணியின் சிறப்பு:

1928 ஆம் ஆண்டில்,இந்திய ஹாக்கி அணி தனது முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்றது, 1960 வரை, இந்திய ஆண்கள் அணி ஒலிம்பிக்கில் தொடர்ந்து ஆறு தங்கப் பதக்கங்களை வென்றது.1928, 1932, 1936, 1948, 1952, 1956, 1964, 1980 ஆகிய ஆண்டுகளில் இந்தியா சாம்பியன்களாக உருவெடுத்தது.இதன்மூலம்,ஒலிம்பிக்கில் எட்டு தங்கப் பதக்கங்களை வென்றது.

விளையாடிய 126 போட்டிகளில் 77 வெற்றிகளைப் பெற்று,இந்தியா சிறந்த செயல்திறனைக் கொண்டது.இதனையடுத்து,2003, 2007 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ஆசிய கோப்பையில் 53 போட்டிகளில் 40 போட்டிகளில் இந்தியா வென்று முதலிடத்தைப் பிடித்தது.

மேலும்,ஆசிய கோப்பை 2011, 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் மூன்று முறை போட்டியில் வென்றதன் மூலம் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில்,மிகவும் வெற்றிகரமான அணியாக இந்தியா உள்ளது. மொத்தத்தில், இந்தியா 27 அதிகாரப்பூர்வ சர்வதேச பட்டங்களை வென்றுள்ளது.மேலும்,இந்திய ஹாக்கி அணி இதுவரை மொத்தம் 18 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்