SAFF U-19 பெண்கள் சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரில் நேபாளத்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. வங்காளதேசத்தில் நடந்த போட்டியில் நேபாளத்தை 4 – 0 என்ற கணக்கில் இந்தியா வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்திய அணி வீராங்கனைகள் முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்காத நிலையில் இரண்டாவது பாதியில் சிறப்பாக விளையாடினர்.
இதன் காரணமாக 4 கோல்களை விளாசி அசத்தினர். முக்கியமாக நேஹா மிகச்சிறப்பாக விளையாடினார். அவர் இரண்டு கோல்களையும், சுலஞ்சனா ரவுல் ஒரு கோலும், ரெம்ருஹட்புயி கோலின் ஒரு கோலும் அடித்தார்கள்.
இந்தியா தனது முதல் போட்டியில் பூட்டான் அணியை வீழ்த்தியிருந்தது, அதற்கு அடுத்து விளையாடிய போட்டியில் வங்காளதேச அணியிடம் வீழ்ந்தது. பிப்ரவரி 8ஆம் தேதி (வியாழன்) அன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…
சென்னை : அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். உலகம் முழுவதும்…
சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…
பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…
டெல்லி : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருடைய கவனமும் அடுத்த ஆண்டு எப்போது ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பில் தான் உள்ளது.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…