#Ind vs Eng:இங்கிலாந்தை தட்டித் தூக்கிய இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் மைதானத்தில் கடந்த 12ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
நல்ல தொடக்கம்:
அதன்படி, முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்தியா 10 விக்கெட் இழந்து 364 ரன்கள் எடுத்திருந்தது.இதனைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடிய இங்கிலாந்து அணி 10 விக்கெட் இழப்புக்கு 391 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இதில் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணியின் விக்கெட்டுக்கள் ஆரம்பத்தில் மளமளவென விழுந்தாலும் ரஹானே மற்றும் புஜாராவின் பொறுப்பான ஆட்டத்தினால் போட்டி டிராவை நோக்கி சென்றது. இதன் பின் இருவரும் வெளியேற, மீண்டும் விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது இந்தியா.
அதிரடி ,சரவெடி :
இந்த இக்கட்டான சூழலில் களமிறங்கிய இந்திய பந்து வீச்சாளர்களான முகமது ஷமி மற்றும் பும்ரா தங்களது திறமையை பேட்டிங்கிலும் வெளிப்படுத்தி வந்தனர். இதில் சிறப்பாக விளையாடிய முகமது ஷமி அரை சதத்தை கடந்தார். மறுபுறம் ஜஸ்பிரித் பும்ரா தனது முழு ஈடுபாட்டையும் காண்பித்தார்.
இந்திய அணி 109.3 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழந்து, 298 ரன்களில் டிக்ளர் செய்தது. இறுதி நேரத்தில் சிறப்பாக விளையாடிய ஷமி 56 ரன்களும், பும்ரா 34 ரன்கள் அடித்த களத்தில் இருந்தனர். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால், இங்கிலாந்து அணிக்கு 272 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
உற்சாக வரவேற்பு:
புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் வரலாற்று இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணி பவுலர்கள் முகமது ஷமி, பும்ராவுக்கு கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட அனைத்து சக வீரர்களும் எழுந்து நின்று கைத்தட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். 273 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்ஸில் களமிறங்கியது.
முன்னிலை பெற்ற இந்தியா:
இந்த போட்டி டிராவில் முடிவடைவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்திய அணியின் அபாரமான பந்து வீச்சால் 120 ரன்னிற்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது.இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளது.5 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.முதல் போட்டி தொடர் மழையின் காரணமாக இடையூறு ஏற்பட்டு ட்ராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.