டோக்கியோ ஒலிம்பிக்:வில்வித்தையில் கால் இறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா…!

Default Image

டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் வில்வித்தை போட்டியில் தைபியினை தோற்கடித்து, இந்தியா காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று 32-வது ஒலிம்பிக் போட்டியின் திறப்பு விழாவானது நடைபெற்றது.இந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பாக 127 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில்,டோக்கியோ ஒலிம்பிக்கில் வில்வித்தை கலப்பு அணிகளுக்கான காலிறுதி தகுதி சுற்று இன்று காலை நடைபெற்றது. இப்போட்டியில்,இந்தியாவின் தீபிகா குமாரி மற்றும் பிரவீன் ஜாதவ் ஆகியோர் சீன தைபியின் சிஹ்-சுன் டாங் மற்றும் சியா-என் ஆகியோருக்கு எதிராக 37 புள்ளிகள் பெற்றனர். ஆனால்,தைபே அணி 36 புள்ளிகள் மட்டுமே பெற்றது.இதனால்,இந்தியா 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.இதன் காரணமாக,ஒலிம்பிக்கில் தீபிகா – பிரவீன் ஜோடி தங்கப்பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீபிகா குமாரி – 9 வது இடம்:

முன்னதாக,ஒலிம்பிக்கில் தீபிகா தனது கணவர் அதானுவுடன் கூட்டு சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால்,அவர் பிரவீன் ஜாதவுடன் இணைந்துள்ளார்.தீபிகா குமாரி மற்றும் பிரவீன் ஜாதவ் இருவரும் இணைந்து போட்டியிடுவது இதுவே முதல் முறை.

இதற்கு முன்னர்,நேற்று நடைபெற்ற வில்வித்தை தகுதி சுற்றில் 663 புள்ளிகளை பெற்று தீபிகா குமாரி 9 வது இடத்தை பிடித்தார். இதனால்,அடுத்து நடைபெறும் மகளிர் தனிநபர் பிரிவில் பூட்டானின் கர்மாவை 32 சுற்றில் எதிர்கொள்ளவுள்ளார்.கடந்த ஆண்டு ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட தீபிகா குமாரி, தனிநபர் தகுதிப்பிரிவில் 20வது இடத்தை பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரவீன் ஜாதவ்:

ஒலிம்பிக் போட்டியின் ஆடவர் பிரிவில் இந்தியா சிறப்பாக பங்கேற்ற பிரவீன் ஜாதவ்,656 புள்ளிகளுடன் 31 வது இடத்தில் உள்ளார்.இவர் ஒலிம்பிக்கில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.

ஜாதவ் முதன்முதலில் பாங்காக்கில் நடந்த 2016 ஆசிய கோப்பை நிலை 1 இல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார், அங்கு ஆண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதனையடுத்து,2005 ஆம் ஆண்டிற்கு பிறகு,2019 உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில்,இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய அணியில் ஒரு உறுப்பினராக இருந்தார்,அதில் அணி வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்