IND vs NZ : “ரொம்ப வேதனையா இருக்கு” போட்டி முடிந்த பிறகு ரோஹித் சர்மா பேசியது என்ன?
நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி அடைத்தது வேதனையாக இருப்பதாக இந்தியாவின் கேப்டன் ரோஹித் சர்மா போட்டி முடிந்த பிறகு பேசியுள்ளார்.
புனே : நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை இழந்தது. இந்த தொடரின் இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை மட்டும் சந்தித்தது இல்லாமல் 12 வருடங்களாகக் கையில் வைத்து இருந்த சாதனையையும் இழந்தது.
அதாவது கடந்த 12 வருடங்களாகச் சொந்த மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரில் தோல்வியடையாமல் வெற்றிகளை மட்டுமே பதிவு செய்து வந்தது. அந்த சாதனையை இன்று நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து உடைத்தெறிந்து.
இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தோல்விக்கு அவர்கள் தான் காரணம் இவர்கள் தான் காரணம் என்று சொல்ல மாட்டோம் எனக் கூறி தோல்விக்கான தெளிவான காரணத்தைப் பற்றிப் பேசினார். இது குறித்துப் பேசிய அவர் ” கடந்த 12 வருடங்களாக நாங்கள் சிறப்பாக விளையாடிய காரணத்தால் இந்த சாதனையை வைத்து இருந்தோம். அந்த சாதனையைக் கடைப்பிடிக்க முடிந்த அளவுக்கு இந்த முறை முயற்சி செய்தோம்.
ஆனால், ரன்கள் சரியாகக் குவிக்க வில்லை என்ற காரணத்தால் தான் இரண்டாவது போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்ததாக நினைக்கிறேன். இந்த போட்டியில் என்ன தவறு செய்து இருக்கிறோம்…திட்டமிட்ட எந்த விஷயத்தைச் செய்யமுடியாமல் போனது என்பதைப் புரிந்துகொண்டு அடுத்ததாக வரும் போட்டிகளில் இன்னும் சிறப்பாகச் செயல்படுவோம். இந்த போட்டியில் தோல்வி அடைந்தது எனக்குத் தனிப்பட்ட முறையில் ரொம்பவே வேதனையாகத்தான் இருக்கிறது.
இருப்பினும், இதனை நினைத்து வேதனைப்படுவதை நமக்கு இன்னும் நிறைய வேலைகள் இருக்கிறது. அதாவது அடுத்ததாக வரும் முக்கியமான போட்டிகளில் நாம் கவனம் செலுத்தவேண்டும். எனவே, அதனைப் பற்றி மட்டும் தான் யோசிக்கவேண்டும். அதனைவிட்டு விட்டு இந்த போட்டியில் தோல்வி அடைய இது தான் காரணம் அது தான் காரணம் எனக் காரணத்தை நான் சொல்ல விரும்பவில்லை.
என்னைப் பொறுத்தவரைத் தோல்விக்கான முக்கியமான காரணமாக நான் பார்த்தது என்னவென்றால், நாங்கள் சரியாக ரன்கள் எடுக்காதது தான். நாங்கள் நிதானமாக விளையாடி ரன்களை குவித்திருந்தோம் என்றால் இந்த நிலைமை வந்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது” எனவும் ரோஹித் தெளிவான காரணத்தை முன் வைத்தார்.