இந்திய அணி நியூசிலாந்து நாட்டில் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரில் 5 டி20, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன. இந்த தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முதலில் 5 டி20 போட்டிகளை விளையாடி வருகின்றது. அதில் ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் இரண்டு டி20 போட்டிகளை இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகளில் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2:0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், மூன்றாவது டி20 போட்டி செடன் பார்க், ஹாமில்டன் என்ற மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை செய்கிறது. இந்திய அணி ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலை வைக்கிறது. அதனால் இந்த போட்டியை வென்று தொடரை கைப்பற்ற மும்மரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. நியூசிலாந்து அணி சொந்த மண்ணியில் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியதால் பின்னிலை வைக்கிறது. அதனால் நியூசிலாந்து அணி இந்த போட்டியை வெற்றி பெற்றே ஆகவேண்டும் என தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதனால் இன்று நடக்கும் போட்டி இரு அணிக்கும் நடக்கும் பலப்பரீட்சை மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல்…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் கராச்சி தேசிய மைதானத்தில்…
சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு...கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும்…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…
கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…