IND vs NZ : முதல் இன்னிங்ஸில் இந்திய அணி படைத்த மோசமான சாதனை!

நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 46 ரன்கள் எடுத்து அல்-அவுட் ஆன நிலையில், இந்திய அணி பல மோசமான சாதனைகளை படைத்துள்ளது.

IndianCricket

பெங்களூர் : கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் 3 போட்டிகள் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று பெங்களூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், இந்திய அணி நிதானமாக விளையாடியும் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியாத அளவுக்குத் தொடர்ச்சியாக தங்களுடைய விக்கெட்களை இழந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்கள் மட்டுமே எடுத்து. இது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்திய நிலையில், இந்திய அணி மோசமான சில சாதனைகளையும் படைத்தது. அது என்னென்ன சாதனைகள் என்பது பற்றிப் பார்ப்போம்.

இதுவரை இந்திய தங்களுடைய சொந்த மண்ணில் குறைவாக ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது 1987ல் புதுதில்லியில் வைத்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடந்த போட்டியில் தான். அந்த போட்டியில், இந்தியா மொத்தமாக 75 ரன்கள் மட்டுமே எடுத்து. அந்த மோசமான சாதனையை மிஞ்சும் அளவுக்கு நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 46 ரன்கள் மட்டுமே எடுத்து சொந்த மண்ணில் குறைவாக ரன்கள் எடுத்த அணியாகவும் மாறியுள்ளது.

அதைப்போல, நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 46 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆன நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆசிய மைதானங்களில் முதலில் பேட்டிங் செய்த அணி, 50 ரன்களுக்குள் ஆட்டமிழப்பது இதுவே முதல்முறை என்ற மோசமான சாதனையைப் படைத்தது.

மேலும், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 5 இந்திய வீரர்கள் டக் அவுட் ஆனார்கள். முதல் இன்னிங்ஸின் போது விராட் கோலி, சர்பராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, கே.எல்.ராகுல், ஆர்.அஷ்வின் ஆகியோர் டக் அவுட் ஆனார்கள். இவர்கள் டக்அவுட் ஆனதும் மோசமான சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளது. அதாவது டெஸ்ட்போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் 3-வது முறையாக 5 விக்கெட் இழந்த சாதனையில் தான்.

  •  இங்கிலாந்து அணிக்கு எதிராக,  மான்செஸ்டர், 2014 (முதல் இன்னிங்ஸ்) – 6 விக்கெட்
  • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக,  கேப் டவுன், 2024 (2வது இன்ன்ஸ்) – 6 விக்கெட்
  • ஆஸ்ரேலியா அணிக்கு எதிராக அடிலெய்டு, 1948 (3வது இன்ன்ஸ்) – 5 விக்கெட்
  • 5 இங்கிலாந்து அணிக்கு எதிராகலீட்ஸ், 1952 (3வது இன்ன்ஸ்) – 5 விக்கெட்
  • 5 நியூஸிலாந்துக்கு எதிராக, மொஹாலி, 1999 (முதல் இன்னிங்ஸ்) – 5 விக்கெட்
  • 5 நியூஸிலாந்துக்கு எதிராக, 2024 (முதல் இன்னிங்ஸ்)*- 5 விக்கெட்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்