IND vs NZ : நியூசிலாந்தை சுருட்டிய தமிழக வீரர்கள்! 10 விக்கெட் வீழ்த்தி அசத்தல்!
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸ்க்கு 259 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.
புனே : நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், இன்று புனேயில் நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற முனைப்போடு களமிறங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆரம்பத்திலிருந்தே நிதானமாக விளையாடி வந்த நியூசிலாந்து இறுதியாக அணி 79.1 ஓவர்களில் தங்களுடைய அனைத்து விக்கெட்களையும் இழந்து 259 ரன்கள் மட்டுமே எடுத்து. இவர்கள் இந்த ரன்களில் சுருள முக்கியமான காரணமே இந்திய அணியின் சுழற்பந்து சிங்கங்களான வாஷிங்டன் சுந்தர், அஸ்வின் இருவரும் தான் என்றே சொல்லலாம்.
ஏனென்றால், இருவரும் அந்த அளவுக்குப் போட்டியின் திருப்பு முனையாக அமைந்துள்ளனர். வாஷிங்டன் சுந்தர் அற்புதமாகப் பந்துவீசி 7 விக்கெட்களை வீழ்த்தினார். அதைப்போல, அஸ்வின் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் காரணமாக தான் நியூசிலாந்து அணி சுருண்டது. வாஷிங்டன் சுந்தர், அஸ்வின் இருவரும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள், இருவரும் இணைந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியை ஆல்-அவுட் செய்துள்ளது ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்று வருகிறது.
முன்னதாக இந்த பிட்ச் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என பலரும் கணித்தனர், குறிப்பாக ரோஹித் சர்மா டாஸ்ஸில் கூறி இருந்தார். அந்த கணிப்பை தமிழக வீரர்கள் இங்கு உறுதி செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும், நியூசிலாந்து அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் அதிகபட்சமாக கான்பாய் 76, ரச்சின் ரவீந்திரன் 65, சான்ட்னர் 33 ரன்கள் எடுத்துள்ளனர். மொத்தமாக நியூசிலாந்து அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 259 ரன்கள் எடுத்துள்ள நிலையில், அடுத்ததாக இந்திய அணி தற்போது பேட்டிங் செய்யக் களமிறங்கியுள்ளது.