IND vs NZ : முதல் போட்டியில் சுப்மன் கில் இல்லை! காரணம் என்ன?
கழுத்து பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் விளையாடமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெங்களூர் : இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி நாளை பெங்களூரு சின்ன சாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் விளையாடமாட்டார் எனத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சுப்மன் கில் விளையாடாததற்கு முக்கியமான காரணம் அவருடைய கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டது தான். காயம் ஏற்பட்டது குறித்து அவர் பிசிசிஐ இடம் பேசி இரண்டு நாட்கள் ஓய்வு எடுக்கக் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவருடைய கோரிக்கையை ஏற்று பிசிசிஐ அவருக்கு ஓய்வு அளிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்னும், சுப்மன் கில் விளையாடமாட்டார் என்பது பற்றிய எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ரோஹித் ஷர்மாவும் செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்து எதுவும் பேசவில்லை. எனவே, இது உண்மையா இல்லையா என்பது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தால் மட்டும் தான் தெரியவரும்.
Read More- IND vs NZ : முதல் டெஸ்ட் போட்டியில் மழை பெய்ய வாய்ப்பு! இந்தியா அணிக்கு தொடரும் சிக்கல்?
ஒரு வேலை நாளை நடைபெறவுள்ள போட்டியில் அவர் விலகினால் அவருக்குப் பதிலாக, அணியில் சர்ஃபராஸ் கான் இடம்பெற அதிகமான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. சர்ஃபராஸ் கான் லெவன்குள் நுழைந்தால், இந்தியாவின் பேட்டிங் ஆர்டர் மீண்டும் மாற்றப்பட வேண்டியிருக்கும்.
ஏனென்றால், யார் நம்பர் 3-இல் பேட்டிங் செய்யச் செல்கிறார் என்பது ஒரு சுவாரஸ்யமான முடிவாக இருக்கும். விராட் கோலி , கே.எல். ராகுல் அல்லது ரிஷப் பந்த் ஆகியோருடன் இந்தியா அணிக்குச் செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே, அப்படி 3-வது இடத்தில் இவர்களில் யாரவது இறங்கினால் 4-வது இடத்தில் சர்ஃபராஸ் கான் விளையாட வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.