IND vs NZ : முதல் போட்டியில் தோல்வி! அந்த 3 பேரை மாற்றிய இந்திய அணி?

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை பொறுத்தவரை, மொத்தம் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

INDvsNZ

புனே: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது. முன்னதாக நடைபெற்ற, முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தியா அணி இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற  முனைப்புடன் களமிறங்கி இருக்கிறது .

இந்தியா அணியின் மாற்றம் :

கடந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் குறைவாக இருந்ததால் இந்திய அணி அந்தப் போட்டியில் தடுமாறியது. எனவே, இந்தப் போட்டியில், மைதானம் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு ஏதுவாக அமையும் என்பதற்காக அணியில் மேலும் ஒரு பந்துவீச்சாளர் உட்பட 3 பேரை இந்திய அணி அதிரடியாக மாற்றம்  செய்துள்ளது.

அதன்படி முகமது சிராஜ், கே.எல்.ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய மூன்று பேரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப்  மற்றும் சுப்மன் கில் அணியில் இடம்பெற செய்துள்ளனர். இந்த மாற்றம் இந்திய அணிக்கு எவ்வாறு கை கொடுக்கும் என்பதை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.

நியூசிலாந்து அணியின் மாற்றம் :

அதே போல நியூசிலாந்து அணியும் சரியாக கனித்து, இந்திய அணியைப் போல ஒரு வேகப்பந்துவீச்சாளரை குறைத்துவிட்டு ஒரு சுழற் பந்துவீச்சாளரை அணையில் சேர்த்துள்ளனர். அதன்படி வேக பந்து வீச்சாளரான மேட் ஹென்றியை நீக்கி விட்டு, அவருக்கு பதிலாக மிட்செல் சான்ட்னரை அணியில் சேர்த்துள்ளனர்.

இந்திய அணியின் பிளேயிங் லெவன் :

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட் (wk), சர்பராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா.

நியூசிலாந்து அணி பிளேயி லெவன் :

டாம் லாதம் (கேப்டன்), டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் ப்ளூன்டெல் (wk), க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, அஜாஸ் படேல், வில்லியம் ஓர்ர்கே

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்