INDvsBAN : போதிய வெளிச்சம் இல்லை!! நிறைவடைந்த முதல் நாள் ஆட்டம்!
இந்தியா வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் நாள் ஆட்டத்தில் அஸ்வின் மற்றும் ஆகாஷ் இணைந்து தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் தற்போது நிறைவடைந்துள்ளது. முன்னதாக காலையில் 9:00 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி சற்று தாமதமாக ஒரு மணி நேரத்திற்கு பிறகு தான் தொடங்கியது.
ஏற்கனவே போட்டி தொடங்குவதற்கு முன் கான்பூரில் மழைக்கான அலெர்ட் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும், இதற்கு முன் பெய்த மழையால் மைதானத்தில் ஈரத்தன்மை இருந்ததால் போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் காலதாமதமானது. அதன்பிறகு தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சைத் தேர்வு செய்து விளையாடியது.
தொடக்கத்திலே அடுத்தடுத்து தொடக்க வீரர்களை இழந்து வங்கதே அணி திணறி வந்தது. அதன் பிறகு மொமினுல் ஹக், சான்டோ இருவரும் இணைந்து அந்த சரிவிலிருந்த்து அணியை சற்று மீட்டெடுத்தனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிறிது நேரத்தில் மழை குறுக்கிட்டதால் முதல் ஷெசனை முடிக்க வேண்டிய கட்டாயத்துக்குள் போட்டியின் நடுவர்கள் தள்ளப்பட்டனர்.
முதல் செஷன் முடிவில் இரு அணிகளுமே சமமான நிலையிலே இருந்தனர். அதன் பின் தொடங்கிய 2-வது செஷனில் வங்கதேச அணி நல்ல ஒரு விளையாட்டை வெளிப்படுத்தி இருக்கிறது. அதன்படி, நிலைத்து விளையாடி வந்த அணியின் கேப்டனான ஷான்டோ 31 ரன்களுக்கு அஸ்வினின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு முஷ்பிகுர் ரஹீம் களமிறங்கினார். மறுமுனையில் மொமினுல் ஹக் 81 பந்துகள் பிடித்து 40 ரன்கள் எடுத்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருந்தார். அவருடன் ரஹீம் 6 ரன்கள் எடுத்து களத்திலிருந்தார். சரியாக 35 ஓவர்கள் முடிந்த நிலையில் வங்கதேச 3 விக்கெட்டுகள் இழந்து 107 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில் மைதானத்தில் விளையாடுவதற்கான எதுவன வெளிச்சம் கிடைக்கவில்லை. இதனால், இன்றைய நாள் ஆட்டம் நிறைவடைந்ததாக அறிவித்தனர். தற்போது வரை இந்த போட்டியில் 2 அணிகளுமே சமமான நிலையில் தான் இருக்கின்றனர். இந்த போட்டியின் 2-வது நாள் ஆட்டம் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.