IND vs AUS : “அஷ்வின் கண்டிப்பா வேணும்”..இந்திய லெவனை லாக் செய்த கவுதம் கம்பீர்!
நியூசிலாந்திற்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தோல்விக்கு பிறகு இந்தியா மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பார்டர்-கவாஸ்கர் டிராபியில் விளையாட ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளது.
பெர்த்: பார்டர்-கவாஸ்கர் டிராபி (BGT) 2024-25 இன் முதல் டெஸ்ட் போட்டி வரும் நவம்பர் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் விளையாட இந்திய அணியும், ஆஸ்ரேலியா அணி வீரர்களும் பயிற்சிகளை தொடங்கியுள்ளனர். இதற்கிடையில், முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் லெவனை இந்திய அணி பேசி முடிவெடுத்து இறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஆஸ்திரேலியா தொடருக்கான இந்த டெஸ்ட் தொடரில் விளையாட முக்கியமாக இந்திய அணி ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை தேர்வாளர்கள் மற்றும் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தேர்வு செய்தனர்.
அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் இடம் பெறாத நிலையில், சமீபத்தில் சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரின் போது பந்து வீச்சில் கலக்கிய வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் ப்ளேயிங் லெவன் அணியில் அதிக இடது கை பேட்ஸ்மேன்கள் இடம்பெறலாம் என்பதை கருத்தில் கொண்டு இந்திய அணி நிர்வாகம் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு முக்கியமாக வாய்ப்பு அளிக்கவேண்டும் என்பதால் அவரை கண்டிப்பாக விளையாட வைக்கவேண்டும் என்பதில் கம்பீர் உறுதியாகவுள்ளார்.
விளையாட வாய்ப்புள்ள இந்திய வீரர்கள் :
கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், விராட் கோலி, ரிஷப் பந்த் (WK), துருவ் ஜூரல், நிதிஷ் ரெட்டி, ஆர் அஷ்வின், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா (C) முகமது சிராஜ்
அதே சமயம் இந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் வீரர்கள் குறித்த விவரத்தை ஆஸ்திரேலியா அறிவிக்கவில்லை, ஆனால் உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோர் வரிசையில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.