INDvsAFG: முதல் டி20 போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு இல்லையா?

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி இன்று மொஹாலியில் இருக்கும் பிந்த்ரா ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. இன்று நடைபெறவுள்ள போட்டிக்காக இரண்டு அணியை சேர்ந்த வீரர்கள் பயிற்சி எடுத்து வருகிறார்கள்.
நவம்பர் 2022க்குப் பிறகு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் எந்த டி20 போட்டிகளிலும் விளையாடவில்லை. அதனை தொடர்ந்து நீண்ட மாதங்களுக்கு பிறகு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இந்த டி20 தொடரில் விளையாடவுள்ளார்கள். விராட் கோலி மட்டும் தனிப்பட்ட காரணங்களுக்காக இன்று நடைபெறவுள்ள முதல் போட்டியில் விளையாடமாட்டார்.
அந்த 2 பேர் இருந்தா டி20 உலகக்கோப்பை இந்தியாவுக்கு தான் – ஏபி டி வில்லியர்ஸ்!
எனவே, ரசிகர்கள் அனைவரும் ரோஹித் ஷர்மாவின் ஆட்டத்தை பார்க்க தான் ஆவலுடன் காத்திருப்பார்கள். மேலும் இந்திய அணியை பொறுத்தவரையில் ஜிதேஷ் சர்மா அல்லது சஞ்சு சாம்சன் இருவரும் யார் இன்றய போட்டியில் விளையாடப்போகிறார்கள் என்ற எதிர்ப்ப்பு இருக்கிறது. நம்பத்தக்க வட்டாரத்தில் இருந்து வரும் தகவலை வைத்து பார்க்கையில் இன்றய போட்டியில் ஜிதேஷ் சர்மா இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இருந்தாலும் இன்று காலையில் இருந்தே சஞ்சு சாம்சன் தீவிர பயிற்சியில் இருக்கும் வீடியோவும் வைரலாகி வந்தது. எனவே அவர் அணியில் இடம்பெறுவாரா இல்லையா என்பதனை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும். அதே சமயம் காயம் காரணமாக முதல் ஆட்டத்தில் விளையாடாத நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் இல்லாத நிலையில், இப்ராஹிம் சத்ரான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி விளையாடவுள்ளது.
இன்று நடைபெறும் போட்டியில் விளையாட எதிர்பார்க்கப்படும் இந்திய வீரர்கள்
ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார். அவேஷ் குமார்.
லேட்டஸ்ட் செய்திகள்
எங்கள் தலைவரை போல பேண்ட் சட்டை அணிந்து கொண்டு நடிக்கிறீர்கள்…முதல்வரை சாடிய ஆதவ் அர்ஜுனா !
February 26, 2025
உங்கள் குழந்தைகளுக்கு மட்டும் மூன்றுமொழி …வாட் ப்ரோ? விஜய் ஸ்டைலில் பதிலடி கொடுத்த அண்ணாமலை!
February 26, 2025
AFG vs ENG: சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறப்போவது யார்? ஆப்கானிஸ்தான் பேட்டிங்…
February 26, 2025
“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ” திமுக, பாஜகவை வச்சி செய்த விஜய்!
February 26, 2025