கோலாகலமாக தொடங்கிய டோக்கியோ ஒலிம்பிக் 2020 திறப்பு விழா..!
ஜப்பானில்,டோக்கியோ ஒலிம்பிக் 2020 திறப்பு விழாவானது தற்போது கோலாகலமாக தொடங்கியுள்ளது.
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டியானது,நடப்பு ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி நடைபெறும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று 32-வது ஒலிம்பிக் போட்டியின் திறப்பு விழாவானது தொடங்கியுள்ளது.இந்த விழாவில் ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே,ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக்,பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், அமெரிக்க அதிபர் ஜோபைடெனின் மனைவிஜில் பைடன், மங்கோலிய பிரதமர் லுவ்சன்னாம்ஸ்ராய் ஓயுன்-எர்டேன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும்,விழாவுக்கான அணிவகுப்பில் அகரவரிசைப்(alphabetic) படி இந்தியா 21 வது இடத்தில் இடம் பெற்றுள்ளது.இந்த தொடக்க நிகழ்ச்சியில்,இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உள்ளிட்ட 20 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும்,குத்துச்சண்டை வீரர் எம் சி மேரி கோம் மற்றும் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் ஜப்பான் தேசிய மைதானத்தில் இந்திய தேசியக்கொடியை ஏற்றி வருவார்கள்.
We’re all connected ????#Tokyo2020 | #Olympics | #UnitedByEmotioin | #StrongerTogether pic.twitter.com/i8qOrn7oUK
— #Tokyo2020 (@Tokyo2020) July 23, 2021
சிறப்பு:
இது வேறு எப்போதும் நடைபெறாத வகையிலான ஒலிம்பிக் போட்டியாகவுள்ளது.ஏனெனில்,ஒலிம்பிக்கின் 125 ஆண்டுகால நவீன வரலாற்றில் கொரோனா தொற்றுக்கு மத்தியில் விடாமுயற்சியுடன் தொடங்கியுள்ளது.அதுமட்டுமல்லாமல்,விளையாட்டில் வெற்றி பெற்ற வீரர்கள் தாங்களாகவே பதக்கத்தை எடுத்து அணிந்து கொள்ள வேண்டும்.
மேலும்,கொரோனா பரவல் காரணமாக ஜப்பானில் எந்த ரசிகர்களும் அனுமதிக்கப்படாததால், பார்வையாளர்கள் இல்லாத முதல் விளையாட்டு என்ற பெருமையை தற்போது டோக்கியோ ஒலிம்பிக் கொண்டுள்ளது.
இந்த ஒலிம்பிக் போட்டியானது ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.இந்த ஒலிம்பிக் போட்டியில் 205 நாடுகளைச் சேர்ந்த 11,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
தமிழகம் :
- டேபிள் டென்னிஸ் – ஷரத் கமல்,மாணிக்க பத்ரா,சத்தியன் ஞானசேகரன்.
- படகு போட்டி -அசோக் தாக்கர் & கே.சி. கணபதி,நேத்ரா குமனன்.
- ஃபென்சிங் – சி.ஏ.பவானி தேவி.
- தடகளம் – ராஜீவ் அரோக்கியா,தனலட்சுமி சேகர்,வி ரேவதி,சுபா வெங்கடேஷ் மற்றும் நாகநாதன் பாண்டி ஆகிய தமிழக விளையாட்டு வீரர்கள் உள்பட இந்திய அணி சார்பாக மேரிகோம்,பி.வி சிந்து போன்ற மொத்தம் 127 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.