குல்தீப் யாதவ் சாஹலை மிஞ்சிவிட்டார்! இம்ரான் தாஹிர் கருத்து!

Imran Tahir about yuzvendra chahal kuldeep yadav

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் தாஹிர் சமீபத்தில் இந்தியாவின் டி20-ஐ மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அணிகளில் இருந்து யுஸ்வேந்திர சாஹல் நீக்கப்பட்டது குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” என்னை பொறுத்தவரை யுஸ்வேந்தி சாஹல் நன்றாக பந்துவீசவில்லை என்று நான் நினைக்கவில்லை. அவர் நல்ல ஒரு சுழற்பந்து வீச்சாளர்.

ஆனால், அவர் சில முக்கியமான போட்டிகளில் சிறப்பாக விளையாட தவறிய காரணத்தால் அவருக்கு அணியில் விளையாட சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று நான் நினைக்கிறன். அவருக்கான வாய்ப்பு அவரை மிஞ்சிய காரணத்தால் குல்தீப் யாதாவிற்கு கிடைக்கிறது.

திடீரென தொடரிலிருந்து வெளியேறி முக்கிய வீரர்..? ஆப்கானிஸ்தான் அணியில் மாற்றம்..!

எதனை வைத்து நான் சொல்ல வருகிறேன் என்றால், கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஆசிய மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணியில் குல்தீப் யாதவ் இடம்பெற்று நன்றாக விளையாடி ஒரு இடத்தை பிடித்துவிட்டார். அவர் அந்த முக்கிய இடத்தை பிடித்துவிட்ட காரணத்தால் தான் தற்போது சாஹளுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். விரைவில் சாஹல் க்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும்” எனவும் இம்ரான் தாஹிர் கூறியுள்ளார்.

மேலும். வரும் ஜனவரி 11-ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டிக்கான விளையாடும் வீரர்கள் யார் யார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த டி20 தொடரில் கேப்டனாக ரோஹித் ஷர்மா செயல்படுவார் என்பது மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்