ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று மொஹாலியில் தொடங்குகிறது. இந்த டி20 தொடரில் நீண்ட மாதங்களுக்கு பிறகு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ளார்கள். இருவரும் கடைசியாக கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் தான் விளையாடி இருந்தார்கள்.
அந்த போட்டிக்கு பிறகு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் தான் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடுகிறார்கள். இதில் இன்று நடைபெறவுள்ள முதல் போட்டியில் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாடமாட்டார் என கூறப்படுகிறது. நீண்ட மாதங்களுக்கு பிறகு இவர்களை போன்ற அனுபவம் கொண்ட வீரர்கள் இந்த போட்டியில் விளையாடுவது இந்திய அணிக்கு பலமாக இருக்கும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய ஏபி டி வில்லியர்ஸ் ” ரோஹித் மற்றும் கோலி ஆப்கானிஸ்தான் எதிரான டி20 தொடரில் தேர்வு செய்யப்பட்டு இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
முதல் டி20 : இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்!
அதைப்போல, அவர்கள் வரும் டி20 உலகக் கோப்பை போட்டியிலும் இடம்பெறவேண்டும் என விரும்புகிறேன். அவர்களை போன்ற வீரர்கள் இருந்தால் கண்டிப்பாக கோப்பையை கூட வெல்லலாம். இதனை 20 வயது இளைஞர்கள் புரிந்துகொள்வார்கள். அவர்களுடைய மனதிலே விராட், ரோஹித் போன்ற சீனியர் வீரர்கள் வேண்டும் என்பது அவர்களுக்கு புரியும்.
வயது பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை என்னை பொறுத்தவரையில் அவர்கள் இருவரும் இந்த மாதிரியான முக்கிய போட்டியில் இருக்கவேண்டும். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் அவர்களுடைய விளையாட்டை நான் பார்க்க மிகவும் ஆவலுடன் காத்து இருக்கிறேன்” எனவும் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…