கடந்த அக்டோபர் மாதம் இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் செயலாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டார்.இதனால் பல விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில் கங்குலி இது குறித்து கூறுகையில் ,ஒரு பிரபலத்தின் மகன் அல்லது மகளாகவோ இருந்தால் எதிலும் ஈடுபடக் கூடாது என சிலர் எண்ணுகின்றனர். முன்னாள் வீரர் சச்சின் மகன் அர்ஜுன் இனி விளையாட தடை விதிக்கலாமா?சச்சின் மகன் என்று பார்க்கக்கூடாது அவரின் திறமையை மட்டுமே எடை போடவேண்டும்.
ஆஸ்திரேலிய அணியில் மார்க் வாஹ், ஸ்டீவ் வாஹ் ஆகிய இரு சகோதரர்களும் பல போட்டிகளில் விளையாடினர்.நல்லவேளையாக எனக்கு மகன் இல்லை. ராகுல் டிராவிடின் மகன்கள் கர்நாடக கிரிக்கெட் லீக்குகளில் சதங்கள் அடித்தனர்.திறமை இருந்தால் அவர்கள் இந்தியா அணியில் இடம் பிடிப்பார்கள்.
இதே தான் ஜெய் ஷா . கடந்த 6-7 வருடங்களாக குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகங்களில் ஒருவராக இருந்து உள்ளார். அமித் ஷாவின் மகனாக இருந்தால் என்ன.? அவர் தந்தை தான் அரசியல்வாதி. ஜெய் ஷா அரசியல்வாதி அல்ல.ஜெய் ஷாவைத் தனிப்பட்ட முறையில் மதிப்பிட வேண்டும் என கங்குலி கூறினார்.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…