ஐசிசி: ஒருநாள் மற்றும் டி20 அணியில் சிறந்த வீரராக இந்திய வீராங்கனை.!

Default Image
  • ஒவ்வொரு நாட்டின் அணிகளிலிருந்தும் ஆண்டின் சிறந்த அணியை தேர்வு செய்து கவுரவித்து வரும் ஐசிசி.
  • 2019-ம் ஆண்டிற்கான சிறந்த வீரராக ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் ஸ்மிருதி மந்தனா இடம்பிடித்துள்ளார்.

இந்தியாவின் மகளிர் கிரிக்கெட்டின் நட்சத்திர வீராங்கனையாக வலம் வருபவர் மும்பையைச் சேர்ந்த 23 வயதான ஸ்மிருதி மந்தனா. 2013-ம் ஆண்டில் வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமான ஸ்மிருதி மந்தனா இதுவரை 51 ஒருநாள் மற்றும் 66 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். பின்னர் இரு வகையான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஸ்மிருதி மந்தனாவுக்கு ஐசிசி புதிய கவுரவம் அளித்துள்ளது.

இந்நிலையில், ஆண்டுதோரும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து ஒரு நாள் மற்றும் டி20 அணிகளை ஐசிசி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டிற்கான சிறந்த மகளிர் அணிகளை இன்று ஐசிசி வெளியிட்டுள்ளது.

ஐசிசியின் ஒரு நாள் அணியில் இந்தியாவை சேர்ந்த ஸ்மிருதி மந்தனா, ஜூலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே மற்றும் பூனம் யாதவ் ஆகிய 4 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.

ஒரு நாள் அணியில் இடம்பிடித்திருந்த ஸ்மிருதி மந்தனா டி20 அணியிலும் இடம்பிடித்துள்ளார். தீப்தி ஷர்மா மற்றும் ராதா யாதவ் ஆகிய மேலும் இரண்டு இந்திய வீராங்கனைகளும் இடம்பிடித்துள்ளனர். இறுதியாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த Ellyse Perry க்கு Rachael Heyhoe-Flint விருதை வழங்கி ஐசிசி கவுரவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்