தென்னாப்பிரிக்க வீரரை இடித்த கோலிக்கு ஐசிசி அதிரடி நடவடிக்கை..!

இந்தியா , தென்னாப்பிரிக்கா இடையே நேற்று முன்தினம் நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியின் போது இந்திய அணி பேட்டிங் செய்யும் போது 5-வது ஒவரை தென்னாப்பிரிக்கா அணியின் பியூரன் ஹென்ட்ரிக்ஸ் வீசினார்.
அப்போது அந்த ஓவரில் ரன் எடுக்கும்போது இந்திய கேப்டன் கோலி நின்றுகொண்டிருந்த பியூரன் ஹென்ட்ரிக்ஸ் கையில் இடித்து உள்ளார்.இதற்கு ஐசிசி தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் விராட் கோலி ஐசிசி விதி 2.12ஐ மீறியுள்ளார்.
King se panga nhi lene ka????#INDvSA #viratkohli pic.twitter.com/1k3Ujqb2E0
— Biggest virat fan (@iampravinkhichi) September 22, 2019
அதாவது போட்டியின்போது மற்ற வீரர்களுடன் அல்லது நடுவர் உடன் தேவை இல்லாமல் உடல் ரீதியாகவோ தொடவே , அடிக்கக்கூடாது என்ற விதியை மீறி உள்ளார். இதனால் கோலிக்கு ஒழுங்குமுறை மதிப்பிழப்பு ஒரு புள்ளி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இரண்டு முறை ஒழுங்குமுறை மதிப்பிழப்பு புள்ளிகள் வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.