நீங்கள் சுட்டால் முதுகைக் காட்ட மாட்டேன்… முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு பஜ்ரங் புனியா பதில்.!

BajrangPunia Tweet

தேவைப்பட்டால் போலீசார் சுடலாம் என்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் ட்வீட்டுக்கு எங்கே வரவேண்டும் என மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா பதில். 

மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, டெல்லியில் கடந்த சில வாரங்களாக ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் செய்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள், போராட்டத்தின் தன்மையை உணர்த்த நேற்று புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர்.

இந்நிலையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்களுக்கும் டெல்லி போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி என்சி அஸ்தானா, தனது ட்விட்டரில் தேவைப்பட்டால் போலீசார் சுடலாம், தற்போது நீங்கள் இழுத்து தான் செல்லப்பட்டுள்ளீர்கள் குப்பையைப் போல, சட்டத்தில் 129-வது சரத்து(Article 129) போலீசாருக்கு சுடுவதற்கு உரிமை வழங்கியுள்ளது என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த பஜ்ரங் புனியா, தனது ட்விட்டரில் நீங்கள் சுடுவதாக இருந்தால் சத்தியமாக எனது முதுகைக் காட்டமாட்டேன், எங்கு வரவேண்டும் என பதில் ட்வீட் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்