ஐபிஎல் கோப்பையுடன் ஓராண்டு விளையாடுவேன்..தோனி கூறிய ரகசியம்..மனம் திறந்த ரெய்னா.!!

Published by
பால முருகன்

ஐபிஎல் கோப்பையை வென்றுவிட்டு, மேலும் ஓராண்டு விளையாடுவேன் என தோனி கூறியதாக ரெய்னா தெரிவித்துள்ளார்.

தோனிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அவருடைய ஆட்டத்திற்காகவே பல ரசிகர்கள் கிரிக்கெட்டை விரும்பி பார்த்து வருகிறார்கள். ஆனாலும் ஒவ்வொரு ரசிகர்களின் மனதிற்குள் ஒரு பயம் கலந்த வேதனைக்குரிய கேள்வி எழுப்பும் விஷயம் என்னவென்றால், இது தான்  தோனிக்கு கடைசி ஐபிஎல் ஆக இருக்கப்போகிறதா..? என்று தான்.

இது குறித்து தோனியிடம் கேட்டாலும் கூட தனது திட்டங்கள் குறித்து தெளிவான பதிலை அளிக்க மறுத்து வருகிறார். இந்த நிலையில், முன்னாள் இந்திய மற்றும் சிஎஸ்கே அணி வீரரான சுரேஷ் ரெய்னா தோனி தன்னிடம் ஓய்வு பெறுவது குறித்து பற்றிய பேசிய ரகசிய தகவலை ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார்.

ஊடகத்திற்கு பேட்டியளித்த சுரேஷ் ரெய்னா ” கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் தோனியை சந்தித்தேன். அவரிடம் நான் ஓய்வு பற்றி கேட்டேன். அதற்கு அவர் கோப்பையை வென்ற பிறகு, இன்னும் ஒரு வருடம் விளையாடுவேன் என உறுதியாக கூறினார்” என்று ரெய்னா கூறியுள்ளார்.  மேலும் பேசிய ரெய்னா “சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக விளையாடிவருகிறது என்றும் கூறியுள்ளார்.

ரெய்னாவிடம் தோனி கூறிய வார்த்தைகள் அனைத்தும் ஐபிஎல்லின் மற்றொரு சீசனில் விளையாடுவார் என்பதை உறுதிப்படுத்துகிறது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Published by
பால முருகன்

Recent Posts

“இந்திய அணியின் ராணி” ஸ்மிருதி மந்தனா படைத்த புது சாதனை!

குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக  3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…

15 minutes ago

கேம் சேஞ்சர் திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா?

டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…

58 minutes ago

நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…

2 hours ago

“வாய் இருக்குனு ஏதேதோ பேச கூடாது”…சீமான் பேச்சுக்கு பிரேமலதா கண்டனம்!

சென்னை :  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

2 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக சார்பில் வி. சி.சந்திரகுமார் போட்டி!

ஈரோடு :  காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…

3 hours ago

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி – பானை சின்னம் வழங்கிய தேர்தல் ஆணையம்!

சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…

3 hours ago