கே.எல்.ராகுலை முதல் முறை லண்டனில் சந்தித்தேன்..! விளக்கம் கொடுத்த நிதி அகர்வால்..!

ஹிந்தி திரைப்பட உலகில் பிரபல நடிகை நிதி அகர்வால். இவர் சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவர் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலை காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் செய்திகள் வெளியானது.
அதற்கு ஏற்றாற்போல இருவரும் ஒன்றாக சுற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி நிதி அகர்வாலிடம் கேட்டபோது மறுத்து , விளக்கமும் கொடுத்துள்ளார்.
கே.எல்.ராகுலை எனக்கு தெரியும் , இருவரும் நல்ல நண்பர்கள், உலக கோப்பைபோட்டியின் போது லண்டன் சென்று இருந்தேன். அப்போது கே.எல்.ராகுலை முதல் முறையாக சந்தித்தேன். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு நம் அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தேன். வேறொன்றுமில்லை நாங்கள் இருவரும் காதலிக்கவில்லை என கூறினார்.