இந்தியா – தென்னாபிரிக்கா இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், முதலில் களமிங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 2021 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய தென்னாபிரிக்கா அணிஅனைத்து விக்கெட்டுகளை இழந்து, 95 ரன்களுக்கு சுருண்டது.
இதனால் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. இதில் முக்கிய காரணமாக குல்தீப் யாதவின் பவுலிங் தான். ஏனென்றால், 2.5 ஓவரில் 17 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதுமட்டுமல்லாமல் டி20 கிரிக்கெட்டில் பிறந்தநாளன்று விளையாடிய வீரர்களில் முதல்முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
பிறந்தநான்று வரலாறு படைத்த குல்தீப் யாதவ்…இவர்தான் முதல் இந்திய சுழற்பந்து வீச்சாளர்…
மேலும், குல்தீப் யாதவ் டி20 போட்டிகளில் இரண்டு ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையும் புரிந்தார். இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டிக்கு முன்பு மற்றொரு சுழற்பந்து பந்துவீச்சாளரான யுஸ்வேந்திர சாஹலை சந்தித்ததாக குல்தீப் தெரிவித்துள்ளார். குல்தீப் கூறியதாவது, போட்டிக்கு ஒரு நாள் முன்பு யுஸ்வேந்திர சாஹலை சந்தித்தேன்.
எனது பந்துவீச்சை அதிகம் மாற்ற வேண்டாம் என்று சாஹல் கூறியதாக குறிப்பிட்டார். மேலும் 2-3 ஆண்டுகள் எனக்கு சிறப்பாக இல்லாவிட்டாலும், சாஹல் எப்போதும் எனக்கு ஆதரவாக இருந்தார் எனவும் குல்தீப் கூறியுள்ளார். மேலும், ஒருநாள் போட்டிகளில் ஒன்றாக விளையாடினால் சிறப்பாக ஆட முயற்சிப்போம் எனவும் குறிப்பிட்டார். பிசிசிஐ வெளியிட்ட சமீபத்திய வீடியோவில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…