நான் கல்லூரிக்கு இதுவரை சென்றதில்லை, கேரளாவில் எம்எஸ் தோனி பேச்சு.!
நான் பள்ளிப்படிப்பை தாண்டி இதுவரை, கல்லூரிக்கு சென்றதில்லை என்று எம்எஸ் தோனி கூறியுள்ளார்.
கேரளாவில் தொழில்நுட்பக் கல்வியாளர், பேராசிரியர் கே.கே. அப்துல் கஃபாரின் சுயசரிதையை வெளியிடும் நிகழ்வில் கலந்து கொண்டு அவரது சுயசரிதை புத்தகத்தை எம்எஸ் தோனி வெளியிட்டார். இந்த நிகழ்வில் பேசிய தோனி, ஆசிரியர் பணி என்பது ஒரு தொழில் மட்டுமல்ல, மாணவர்களை ஒழுங்குபடுத்தும் ஒரு கலை, மேலும் கற்றல் திறன் என்பது ஒவ்வொரு மாணவருக்கும், மாறுபடும் என்று கூறினார்.
நான் எனது பள்ளிப்படிப்பை தாண்டி, கல்லூரிக்கு இதுவரை சென்றதில்லை. ஆனால் நான் எனது பள்ளியிலேயே அதைச் சிறப்பாக செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன் என தோனி மேலும் கூறினார்.