சேவாக் தலைமுடியை விட என்னிடம் அதிக பணம் இருக்கிறது.! நக்கலா பதிலடி கொடுத்த பாகிஸ்தான் வீரர்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அக்தர், யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் கிரிக்கெட் தொடர்பாகவும், வீரர்கள் தொடர்பாகவும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
  • கடந்த 2016-ம் ஆண்டு சேவாக் அவரது சேனல் குறித்து கருது தெரிவித்தார், அதற்கு தற்போது சேவாக் உங்களுடைய தலையில் இருக்கும் முடியை விட என்னிடம் அதிகமான பணம் இருக்கிறது என்று, கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான் போட்டி என்றாலே அனல் பறக்கும். அதிலும் அதிவேகத்தில் அக்தர் பந்து வீச, அதை சேவாக் அடித்து பறக்கவிட என போட்டி சுவாரிஸ்யமாக இருக்கும். அவர்கள் விளையாடிய காலத்தில் களத்தில் மோதிக்கொண்டாலும், களத்திற்கு வெளியே இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பெரும்பாலான வீரர்கள் நல்ல உறவில் தான் இருந்தனர். பின்னர்  கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அக்தர், யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் கிரிக்கெட் தொடர்பாகவும், வீரர்கள் தொடர்பாகவும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அதிலும், இந்தியர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட்டை அதிகமாக மையப்படுத்தி வீடியோ வெளியிடுவதால், அந்த வீடியோக்களில் அவர் பேசுவது இந்திய ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறுகிறது. இதுகுறித்து கடந்த 2016-ம் ஆண்டு கருத்து தெரிவித்த சேவாக், அக்தர் எங்களுக்கெல்லாம் நல்ல நண்பர்தான், ஆனால் விளையாடிய காலங்களில் எங்களைப் பற்றி பெருமையாக பேசவில்லை. இப்போது அவரது தொழில் யூடியூப் சேனலுக்கு அதிக பார்வையாளர்களை பெறுவதற்காகவும், இந்தியாவில் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், எங்களை புகழ்கிறார் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், 4 ஆண்டுகள் கழித்து சேவாக்கின் கருத்துக்கு நக்கலாக பதிலடி கொடுத்த அக்தர். இதுகுறித்து பேசியுள்ளார் அவர், சேவாக் உங்களுடைய தலையில் இருக்கும் முடியை விட என்னிடம் அதிகமான பணம் இருக்கிறது என்று, நான் இதை வேடிக்கையாக தான் சொல்கிறேன், நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளுங்கள் எனக் கூறியிருந்தார். அக்தரின் இந்த பேச்சை கேட்ட நெட்டிசன்கள் சேவாக்கின் தலைமுடி குறித்த புகைப்படங்களை அவருக்கு பகிர்ந்து வருகின்றனர். இணையத்தில் இந்த பேச்சி பரவி வருகிறது, அதனை இந்திய ரசிகர்கள் பகிர்ந்தும் கோவத்தை வெளிப்படுத்தியும் வருகிறார்கள்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சர்ச்சைக்குள்ளான வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவுக்கு திரெளபதி முர்மு ஒப்புதல்.!

டெல்லி : வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக,…

16 minutes ago

பாம்பன் புதிய ரயில்வே பாலம் இன்று திறப்பு: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

ராமேஸ்வரம் : புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமானப்…

38 minutes ago

PBKS vs RR : பஞ்சாபை பந்தாடிய ராஜஸ்தான்! 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…

12 hours ago

PBKS vs RR : பஞ்சாப் பந்துவீச்சை சிதறடித்த ராஜஸ்தான்! வெற்றிக்கு 206 ரன்கள் டார்கெட்!

சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…

14 hours ago

“சினிமாவில் அவர் CM ஆகலாம்., ஆனால் நிஜத்தில்.?” மீண்டும் விஜயை சீண்டிய பவர்ஸ்டார்!

சென்னை  : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…

14 hours ago

CSK vs DC : மீண்டும் சொதப்பல்.. மீண்டும் தோல்வி! டெல்லியிடம் வீழ்ந்த சென்னை!

சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…

16 hours ago