தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சூர்யகுமார் தலைமையிலான இளம் இந்திய அணி முதலில் 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அடுத்தாண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலககோப்பைக்கு இப்போட்டிகள் இந்திய அணிக்கு ஒரு அடித்தளமாக இருக்கும் என கருதப்படுகிறது. ஏனென்றால், டி20 அணிக்கு எம்மாதிரியான வீரர்களை தேர்வு செய்வது, இதுபோன்ற கலவை கொண்ட அணியை உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்படும்.
குறிப்பாக, ரோகித், கோலி உள்ளிட்ட மூத்த வீரர்கள் இல்லாமல், இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஆனால், முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றதது. இதனால், இந்திய அணியில், முன்பு சிறப்பாக செயல்பட்ட ருத்ராஜ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஏன் இடம்பெறவில்லை என பல்வேறு கேள்வி எழுந்துள்ளது. இந்த சூழலில் இன்று மூன்றாவது போட்டியில் களமிறங்குகிறது இந்திய அணி.
இந்த நிலையில், இந்திய அணியில் என்ன நடக்கிறது என முன்னாள் இந்திய அணி வீரர் கவுதம் கம்பீர் கட்டமாக பேசியுள்ளார். பிரபல தொலைக்காட்சி ஊடகத்தில் பேசிய அவர், இந்திய அணியில் என்ன நடக்கிறது என்று எனக்கு சுத்தமாக புரியவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர், ருத்ராஜ் ஆகியோர் ஏன் அணியில் இடம்பெற்றவில்லை. ஒருவேளை இந்திய அணி இடது கை, வலது கை பேட்ஸ்மேன்கள் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும் என முடிவெடுத்தார்களா என்று அவர்கள் தான் கூற வேண்டும்.
இது குறித்து சூரியகுமார் யாதவும் இந்திய அணி நிர்வாகமும் தான் விளக்கம் அளிக்க வேண்டும். இதுபோன்று, டி20 கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் ரவி பிஷ்னாயும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இடம்பெறவில்லை. அதேபோல் கில் வந்ததும் ருதுராஜ் வெளியில் அமர வைக்கப்பட்டு இருக்கிறார். எனவே, இது உங்களுடைய முக்கிய அணி கிடையாது என்று நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இளம் வீரர்களாக இரண்டு பேர் இருக்கிறார்கள். ஒருவர் ஜெய்ஸ்வால். மற்றொருவர் ரிங்கு சிங். ஒருவர் போட்டியை ஆரம்பிக்கிறார் ஒருவர் போட்டியை முடித்து வைக்கிறார். ரிங்கு சிங் நிறைய கடினப்பட்டு உழைத்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். ரிங்கு சிங் எந்த வெற்றி பெற்றாலும் அதற்கு அவர் தகுதியானவர் என்று நான் நினைக்கிறேன். எனவே, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நிர்வாகம் முடிவு எடுத்திருக்கலாம் என்றார்.
மேலும் கம்பீர் கூறியதாவது, கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பலம் என்பது அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு வெளிநாட்டவரைக் கருத்தில் கொள்ளாததுதான். அவர்கள் தங்கள் சொந்த நாட்டவரை நம்புகிறார்கள். நாமும் அதையே செய்ய வேண்டும். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ஒரு இந்தியர் மட்டுமே இருக்க வேண்டும். பாகிஸ்தானுக்கும் அப்படித்தான் இருக்க வேண்டும் எனவும் கூறினார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…