எனது மகனின் காதல் விவகாரம் எனக்கே தெரியாது.! ஹர்திக் பாண்டியா தந்தை குமுறல் .!
- ஹர்திக் பாண்டியா இந்த புத்தாண்டு அன்று நடிகை நடாசாவை காதலிப்பதாக தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறினார்.
- இருவரும் துபாய்க்கு விடுமுறைக்காக செல்கிறார் என்று தான் தெரியும்.ஆனால் நிச்சயதார்த்தம் செய்யப் போகிறார் என்று எங்களுக்கு தெரியவே தெரியாது.
முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா தற்போது இந்திய அணியில் விளையாடாமல் ஓய்வு பெற்று வருகிறார். இந்நிலையில் ஹர்திக் பாண்டியா இந்த புத்தாண்டுக்கு தனது ரசிகர்கள் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்தார். அது என்னவென்றால் நடிகை நடாசாவை காதலிப்பதாக தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறினார்.
இந்த செய்தி ரசிகர்கள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதை அறிந்த அவரது சகோதரர் குர்ணல் பண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் “பைத்தியக்காரத்தனத்திற்குள் உங்களை வரவேற்கிறேன்” என மறைமுகமாக நக்கல் செய்த டுவிட் செய்திருந்தார்.
இந்நிலையில் ஹர்திக் பாண்டியா நடிகை நடாசா ஸ்டான்கோவிச்சுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட செய்தி ரசிகர்களுக்கு மட்டுமல்ல ஹர்திக் பாண்டியா குடும்பத்தினருக்கும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து ஹர்திக் பாண்டியா தந்தை கூறுகையில் , நடாசா ஒரு நல்ல பெண். அவரை மும்பையில் பல முறை நாங்கள் சந்தித்துள்ளோம். இவர்கள் இருவரும் துபாய்க்கு விடுமுறைக்காக செல்கிறார் என்று தான் தெரியும். ஆனால் அவர்கள் நிச்சயதார்த்தம் செய்யப் போகிறார் என்று எங்களுக்கு தெரியவே தெரியாது.
இவர்களின் நிச்சயதார்த்தம் எங்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர்கள் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பின்னர்தான் எங்களுக்கு தெரியும் என ஹர்திக் பாண்டியா தந்தை ஒரு பத்திரிக்கை பேட்டி அளித்துள்ளார்.