ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூரில் 1982-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி மிதாலிராஜ் பிறந்தார். இவர் தந்தை துரைராஜ் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர். ஆனால் விமானப்படையில் வேலை செய்த துரைராஜ் பல இடங்களில் வேலை செய்யச் சென்றதால் செகந்திராபாத்தில் பணியாற்றினார்.
இதனால் அங்கேயே மிதாலிராஜ் தனது கல்லூரிப் படிப்பையும் , பள்ளிப் படிப்பை முடித்தார். இதைத்தொடர்ந்து 1999-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதல் முறையாக மிதாலிராஜ் இந்திய அணிக்காக களம் இறங்கினார்.
முதல் போட்டியில் மிதாலிராஜ் 114 ரன்கள் குவித்தார். மிதாலி ராஜ் இந்திய அணிக்காக 10 டெஸ்ட் போட்டி , 206 ஒருநாள் போட்டி , 89 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். மேலும் 20 ஆண்டுகளாக சர்வதேச போட்டியில் விளையாடிய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
இந்நிலையில் மிதாலி ராஜிக்கு தமிழ் தெரியாது எனவும் அவர் ஆங்கிலம் , தெலுங்கு மற்றும் இந்தி மட்டுமே நல்லா பேசுவார் என ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டு இருந்தார். அதற்கு பதிலளித்த மிதாலிராஜ் “தமிழ் என் தாய்மொழி. நான் தமிழ் நன்றாக பேசுவேன். தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை” என தமிழில் ட்விட் செய்து உள்ளார்.மேலும் ஒரு இந்தியன் என்ற பெருமை கொள்வதாகவும் தெரிவித்தார்.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…