மகளிர் டென்னிஸ் விளையாட்டில் உலகின் சிறந்த வீராங்கனையாக இருந்தவர் தான் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வீராங்கனை ஆசுலி பார்டி. தற்போது இவருக்கு 25 வயதுதான் ஆகிறது.
இந்த வயதிலேயே இவர் தொடர்ந்து 15 முறை டென்னிஸ் தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். மேலும் இவர் மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் கைப்பற்றியுள்ளார். இளம் வயதிலேயே புகழின் உச்சத்தில் இருக்கும் ஆசுலி பார்டி திடீரென்று தான் ஓய்வு பெறுவதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார்.
இவரது ஓய்வு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள போலந்து டென்னிஸ் வீராங்கனை இகா ஸ்வியாடெக், ஆசுலி பார்டின் ஓய்வு குறித்து அறிந்ததும் நான் 40 நிமிடங்கள் தொடர்ந்து அழுது கொண்டிருந்தேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் இவரது ஓய்வுக்குப் பின்பதாக என்ன நடக்கப் போகிறது என்று எனக்கு தெரியவில்லை. அவரது ஓய்வு உண்மையிலேயே என்னை ஆச்சரியப்படுத்தியது.
அவர் என்ன நினைத்து இவ்வாறு ஓய்வு எடுத்து இருப்பார் என்பதை புரிந்து கொள்வதற்கு எனக்கு நேரம் தேவைப்பட்டது. இருந்தாலும் அவளது முடிவு மிக தைரியமானது. அதனால் நான் நிறைய உணர்ச்சிகளையும் கற்றுக்கொண்டேன் என தெரிவித்துள்ளார்.
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…