ரகசியமாக இருப்பதால் தோனியின் எதிர்காலம் குறித்த விவரங்களை என்னால் வெளியிட முடியாது – எம்.எஸ்.கே.பிரசாத்
இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்த எம்.எஸ்.கே.பிரசாத் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர் ககன் கோடா ஆகிய இருவரின் பதிவிக்கலாம் முடிந்த நிலையில், அவர்களது இடத்திற்கு சுனில் ஜோஷியும் ஹர்வீந்தர் சிங்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய அணியின் தலைமை தேர்வாளர் என்ற தனது பதவி முடிவுக்கு வந்த நிலையில், அவர் ஒரு சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்தார். அதாவது எம்.எஸ்.தோனி தனது எதிர்காலம் குறித்து தெளிவாக உள்ளதாகவும், அது குறித்து அவருக்கும் அணி நிர்வாகத்துக்கும் தெரிவித்ததாகவும் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார். இது ரகசியமானது என்பதால் என்னால் விவரங்களை வெளியிட முடியாது. எங்களுக்கிடையில் பகிர்ந்து கொள்ளப்பட்டவை அனைத்தும் அங்கேயே இருப்பது நல்லது என்றும் இது ஒரு எழுதப்படாத குறியீடு என அவர் குறிப்பிட்டார்.