‘நாட்டிற்காக விளையாடியது பெருமையாக உள்ளது’ ! ஓய்வை அறிவித்தார் சுனில் சேத்ரி !!

Sunil Chethri

சென்னை : இந்திய கால்பந்து அணியின் கேப்டனான சுனில் சேத்ரி தற்போது தனது சர்வேதச கால்பந்திலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

இந்திய கால்பந்து அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான சுனில் சேத்ரி அவரது கால் பந்து ஓய்வை குறித்து 10 நிமிட வீடியோவை அவரது X தளத்தில் பேசி வெளியிட்டு இருந்தார். அந்த வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் அவர் தனது சர்வேதச கால்பந்திலிருந்து உய்ர்வு பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கால் பந்து அணியின் கேப்டனான இவர் வருகிற குவைத் அணிக்கு எதிரான பிபா (FIFA) உலகக் கோப்பைக்காக விளையாடும் தகுதிப் போட்டி தான் தனது கடைசி சர்வேதச போட்டியாக இருக்கும் என்றும் அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா நாட்டிற்காக விளையாடியது பெருமையாக உள்ளது எனவும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2004-ம் ஆண்டு இந்திய அணிக்காக தனது முதல் சர்வதேச போட்டியை பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடினார்.

மேலும், அதே போட்டியில் தனது முதல் சர்வேதச கோலை பதிவு செய்ததார். தற்போது, சர்வேதச கால்பந்தில் அதிக கோல் அடுத்தவர்களின் பட்டியலில் கால் பந்து ஜாம்வபவன்களான ரொனால்டோ (128 கோல்கள்), மெஸ்ஸிக்கு (106 கோல்கள்) அடுத்தப்படியாக உலகத்தரத்தில் 94 கோல்கள் அடித்து 3-வது இடத்தில் சுனில் சேத்ரி இருந்து வருகிறார். இவர் தனது 20 ஆண்டுகால கால் பந்து பயணத்திற்கு பிறகு தற்போது அவர் தனது 39 வயதில் ஓய்வை அளித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக செயல்பட தொடங்கியதிலிருந்து இவர் இந்திய அணியை வேறு ஒரு கோணத்திற்கு கொண்டு சென்றார். கால் பந்தில் அசத்திய திறமையை கொண்ட சுனில் சேத்ரி 2011-ம் ஆண்டு அர்ஜுனா விருதையும், 2019-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார். மேலும், அவரது கால்பந்து வாழ்க்கையில் ஏஐஎப்எப் (AIFF) ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Joe Root
erode by election 2025
edappadi palanisamy mk stalin
R Ashwin -- Virat kohli
abhishek sharma varun chakravarthy
vidaamuyarchi anirudh