உலக கேடட் சாம்பியன்ஷிப்: 5 தங்கம் உட்பட 13 பதக்கங்களை வென்ற இந்தியா – பிரதமர் வாழ்த்து..!

Published by
Edison

ஹங்கேரியில் நடைபெற்ற உலக கேடட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணியினர் 13 பதக்கங்களை வென்றுள்ளதால்,அவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில்,கடந்த 19 ஆம் தேதி முதல் நேற்று வரை உலக கேடட் சாம்யின்ஷிப் போட்டி நடைபெற்றது.அதன்படி,நடைபெற்ற மல்யுத்தம், துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழான போட்டியில் இந்திய மல்யுத்த வீரர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதனையடுத்து,நேற்று நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின்,73 கிலோ எடை பிரிவில் இந்திய மல்யுத்த வீரர் பிரியா மாலிக் ,பெலாரஸ் நாட்டின் க்சேனியா படபோவிச்சை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்று,மல்யுத்தத்தில் தனது பலத்தை வெளிப்படுத்தி சர்வதேச அளவில் நாட்டை பெருமைப்படுத்தினார்.முன்னதாக,புனேவில் நடந்த கெலோ இந்தியாவின் 2019 ஆம் ஆண்டு போட்டியில் தங்கப் பதக்கத்தையும் வென்ற இவர், பின்னர் டெல்லியில் நடைபெற்ற 17 வது பள்ளி விளையாட்டுப் போட்டிகளிலும் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்,மல்யுத்த ஃப்ரீஸ்டைல் பிரிவில் தானு, கோமல், அமன் குலியா, சாகர் ஜக்லான் ஆகியோரும் தங்கம் வென்றனர். இதனைத் தொடர்ந்து, மல்யுத்தத்தில் ஜஸ்கரன் சிங் மற்றும் இந்திய மகளிர் மல்யுத்த அணி வெள்ளி வென்றது.மேலும்,அங்கித் குலியா, வர்ஷா, சாஹில் ஆகியோர் வெண்கலத்தை வென்றனர்.இதனால் 5 தங்கம் உட்பட மொத்தம் இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

பிரதமர் வாழ்த்து:

இதனையடுத்து,உலக கேடட் சாம்பியன்ஷிப்பில் பதக்கங்களை வென்ற இந்திய அணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது :”எங்கள் விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து எங்களுக்கு பெருமை சேர்க்கிறார்கள். ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடந்த உலக கேடட் சாம்பியன்ஷிப்பில் 5 தங்கம் உட்பட 13 பதக்கங்களை இந்தியா வென்றது. எங்கள் அணிக்கு வாழ்த்துக்கள் மற்றும் அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்”,என்று பதிவிட்டிருந்தார்.

Published by
Edison

Recent Posts

கனமழை எதிரொலி : மலை ரயில் சேவை இன்றும் நாளையும் ரத்து!

கோவை: கனமழையின் தீவிரத்தால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான மலை ரயில் சேவை இன்றும்…

8 mins ago

அமெரிக்க அதிபர் தேர்தல் : ஒருவேளை தோற்றால்?.. டிரம்ப் எடுத்த முடிவு..!

அமெரிக்கா : அதிபர் தேர்தல் நேர்மையாக நடக்கும் பட்சத்தில், ஒருவேளை தான் தோற்றால், தோல்வியை ஒப்புக் கொள்வதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.…

12 mins ago

தடைகள் தாண்டி ‘கம்பேக்’ கொடுத்துள்ளார் செந்தில் பாலாஜி.! மு.க.ஸ்டாலின் பெருமிதம்.!

கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அனுப்பர்பாளையத்தில் ரூ.300…

13 mins ago

47-வது அதிபர் தேர்தல் : கமலா ஹாரிஸ் முன்னிலை பெற வாய்ப்பா? டிரம்ப் முன்னிலைக்கு காரணம் என்ன?

வாஷிங்க்டன் : அமெரிக்கவில் 47-வது அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்…

34 mins ago

“பிடிக்கிறதோ இல்லையோ பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பேன்” டிரம்ப் கொடுத்த வாக்குறுதி!

அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வாக்குபதிவு நடந்து முடிந்து தற்போது வாக்கு எண்ணிக்கை மும்மரமாக நடைபெற்று வருகிறது. ஆர்கன்சாஸ்,…

42 mins ago

திடீர் டிவிஸ்ட்., மிகப்பெரிய கலிபோர்னியாவை கைப்பற்றிய கமலா ஹாரிஸ்.!

கலிபோர்னியா : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து,…

1 hour ago