சால்ட் பே எப்படி உலகக் கோப்பையைத் தொட முடியும்! விசாரணை நடத்தும் FIFA.!
சால்ட் பே எப்படி ஆடுகளத்திற்கு வந்தார், எப்படி உலகக் கோப்பையைத் தொட்டார் என்பது குறித்து ஃபிஃபா விசாரிக்கிறது.
ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் பிரான்ஸை வென்று அர்ஜென்டினா அணி, சாம்பியன் பட்டம் வென்றது. இந்த உலகக்கோப்பை கொண்டாட்டத்தில், பிரபல செஃப் ஆன சால்ட் பே என்றழைக்கப்படும் துருக்கியைச்சேர்ந்த நுஸ்ரத் கோக்சே, ஃபிஃபா விதியை மீறி உலகக்கோப்பையுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் இன்ஸ்டாவில் பகிர்ந்தது சர்ச்சையை கிளப்பிய்த்து.
இது குறித்து ஃபிஃபா, சால்ட் பே எவ்வாறு ஆடுகளத்திற்குள் நுழைந்தார், அவருக்கு எவ்வாறு அனுமதி கிடைத்தது, மேலும் உலகக்கோப்பையை அவர் எவ்வாறு தொட முடியும், அதையும் மீறி உலகக்கோப்பையுடன் எடுத்துக்கொண்ட படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார்.
வெற்றிக்குப் பிறகு அர்ஜென்டினா வீரர்களின் கொண்டாட்டங்களுக்கு இடையூறு செய்த சால்ட் பே, மீது விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஃபிஃபா தெரிவித்துள்ளது.