இன்று இரண்டாம் நாள் ஐபிஎல் ஏலம்! கைவசமுள்ள இருப்புத் தொகை எவ்வளவு?
முதல் நாள் முடிவில் 72 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் 467 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம் நாளுக்கான ஏலம் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்க உள்ளது.
ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் நாள் முடிவில், 72 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முதல் நாள் முடிவில் 72 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த அணிகளாலும் 467 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது.
அதில், அதிகபட்சமாக பெங்களூருவிடம் ரூ.30.65 கோடியும், சன்ரைசர்ஸ் அணியிடம் குறைவாக ரூ.5.15 கோடி உள்ளது. முதல் நாளில் மொத்தம் 84 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர், அவர்களில் 72 வீரர்கள் விற்கப்பட்டனர், 12 வீரர்கள் விற்கப்படாமல் இருந்தனர்.
ஏலத்தில் மொத்தம் 477 வீரர்கள் கலந்து கொண்டனர், எனவே இப்போது 393 வீரர்களுக்கான ஏலம் என்பது இரண்டாவது நாளான இன்று நடைபெறவுள்ளது. முதல் நாள் ஏலத்தில் 84 வீரர்களின் பெயர்கள் மட்டுமே வந்திருந்தால், இரண்டாவது நாளில் மீதமுள்ள 393 வீரர்களை எப்படி ஏலம் எடுக்க முடியும் என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
இருப்பினும் ஐபிஎல் ஏலத்தின் இரண்டாம் நாளில், முக்கிய வீரர்களான ஃபாஃப் டு பிளெசிஸ், அஜிங்க்யா ரஹானே, மார்கோ ஜென்சன், பிருத்வி ஷா, கேன் வில்லியம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், தீபக் சஹர் ஆகியோர் உள்ளனர்.
மீதுமுள்ள தொகை :
- பெங்களூரு – ரூ.30.65 கோடி
- மும்பை – ரூ.26.1 கோடி
- பஞ்சாப் – ரூ.22.50 கோடி
- குஜராத் -ரூ.17.50 கோடி
- ராசஸ்தான் – ரூ.17.35 கோடி
- சென்னை – ரூ.15.60 கோடி
- லக்னோ – ரூ.14.85 கோடி
- டெல்லி – ரூ.13.80 கோடி
- கொல்கத்தா – ரூ.10.05 கோடி
- ஹைதராபாத் – ரூ.5.15 கோடி