இந்தியாவின் பழமையான மைதானங்களில் ஒன்று தான் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியம். மாநில அரசுக்கு சொந்தமான இந்த ஸ்டேடியத்தில் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் குத்தகைக்கு எடுத்து நிர்வகித்து வருகிறது. குத்தகை காலம் அண்மையில் முடிந்து, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக ரூபா குருநாத், செயலாளர் ஆர்.எஸ். ராமசாமி பதவியேற்றனர். இந்நிலையில், குத்தகை காலத்தை நீடிக்கவும், திறக்கப்படாமல் இருக்கும் 3 கேலரிகள் பிரச்சனைக்கு தீர்வு காணவும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிடம் தெரிவித்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக சேப்பாக்கம் ஸ்டேடியத்தின் குத்தகை காலத்தை மேலும் 21 ஆண்டிக்கு நீடித்து தமிழக அரசு உத்தரவுட்டுள்ளது. இதையடுத்து ஐ,ஜே,கே உள்ளிட்ட 3 கேலரிகளை திறக்கும் பணியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தீவிரம் காட்டி வருகிறது.
இதைத்தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள ஐ,ஜே,கே என்ற 3 கேலரிகள் தற்போது வரை பயன்பாட்டில் இல்லை. இவற்றில் மொத்தம் 12000 பார்வையாளர்கள் அமரலாம். கடந்த 2012-ம் ஆண்டு முதல் இந்த பிரச்னை நீடித்து வருகிறது. சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தில் விதிகளின்படி ஸ்டேடியத்தில் உள்ள அந்த கேலரிகள் இடையிலான இடைவெளி 8 மீட்டர்களாக இருக்க வேண்டும். ஆனால் இடைவெளி 5.4 மீட்டர்களாக மட்டுமே உள்ளது. அதனால அந்த கேலரிகளுக்கு சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் அனுமதி வழங்கவில்லை. எம்.சி.சி க்ளப் மற்றும் கே. மாடம் ஆகியவற்றின் இடைவெளியை அதிகரிக்க ஸ்டேடியத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்தை இடித்துவிட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து சென்னை பெருநகர ஆணையத்தில் அனுமதி கேட்க உள்ளது.
அதில் அடுத்தமாதம் அதை இடித்துவிட்டு மார்ச் இறுதியில் ஐபிஎல் போட்டியின் போது அந்த கேலரிகளை திறக்கவிட முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மெட்ராஸ் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஆர். ரமேஷ் என்பவர் கூறுகையில், சென்னை மாநகராட்சி மற்றும் சிஎம்டிஏ-விடம் உடற்பயிற்சி கூடத்தை இடிக்க அனுமதி கேட்டு விண்ணப்பிக்க இருக்கின்றோம். பிப்ரவரி மாதம் இவைகளை இடிக்கப்பட்டு பிரச்சனைகள் தீர்க்கப்படும். பின்பு மார்ச் மாதம் நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கு மூடப்பட்டு இருந்த கேலரிகள் ரசிகர்களுக்கு திறக்கப்படும், ஐபிஎல் போட்டிகள் மட்டுமில்லாமல் சர்வேதேச போட்டிகளுக்கும் தொடர்ந்து ரசிகர்களுக்காக திறக்கப்படும் என தெரிவித்தார்.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…