பாரிஸ் ஒலிம்பிக் : எத்தனை பதக்கங்கள்? பதக்கப் பட்டியலில் இந்தியாவின் நிலை என்ன?
பாரிஸ் : ஒலிம்பிக் தொடரில் கலந்து கொள்ளும் நாடுகள் தங்களது நாட்டிற்கு அதிக பதக்கங்களை பெற்று தர வேண்டும் என்று நினைத்து தங்களது கடுமையான உழைப்பை போட்டு விளையாடுவார்கள். அதில் மிக முக்கியமாக அமெரிக்கா மற்றும் சீனா நாடுகள் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடிப்பதற்காகவே கடுமையாக போராடுவார்கள்.
மேலும், இந்தியாவிற்கு ஒரு வெண்கலப் பதக்கம் கிடைக்காத என நாம் ஆவலுடன் இருக்கையில், அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகள் பதக்கப்பட்டியலில் யார் முதலில் இருப்பார்கள் என கடுமையான விளையாட்டை விளையாடி வருகின்றனர். நடைபெற்று வரும் தற்போதைய பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி இது வரை ஒரு வெள்ளிப் பதக்கம், 4 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 5 பதக்கங்களை வென்றுள்ளனர்.
அதில், இந்திய நாடே தங்கத்திற்காக பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றது மகிழ்ச்சியாக இருந்தாலும், தங்கப்பதக்கம் தவிறியது சற்று வருத்தம் அளித்தாலும், வெள்ளிப் பதக்கத்தால் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் ஆறுதல் அடைந்துள்ளானார். மேலும், நேற்று முதல் இவரது வெற்றியை இந்தியா முழுவதும் பாட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
மேலும், இந்த ஆண்டின் ஒலிம்பிக் தொடரில் பாதகப்பட்டியலில் வழக்கம் போல அமெரிக்கா 30 தங்கம், 38 வெள்ளி, 35 வெண்கலம் என மொத்தம் 103 பதக்கங்களை வென்று முதலிடத்தில் நீடித்து வருகிறது. அவர்களை தொடர்ந்து சீனா 29தங்கம் , 25 வெள்ளி, 29 வெண்கலம் என மொத்தம் 73 பதக்கங்களுடன் 2-ஆம் இடத்தில் இருந்து வருகின்றனர். 3-வது இடத்தில் ஆஸ்திரேலியா 18தங்கம், 14 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 45 பதக்கங்களுடன் இருக்கின்றனர்.
இந்த பட்டியலில் இந்தியா 1 வெள்ளியும், 3 வெண்கல பதக்கமும் வென்று 64-வது இடத்தில் இருந்து வருகின்றனர். இதற்கு மேல் பதக்கப்பட்டியலில் முன்னேற வேண்டும் என்றால் இன்று நடைபெறும் ஆண்களுக்கான 3000மீ ஸ்டீபிள் சேஸ் இறுதி போட்டியில் இந்தியா அணி சார்பாக விளையாடும் அவினாஷ் முகுந்த் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும். ஒரு வேளை தங்கப்பதக்கம் வென்றால் இந்திய அணி பட்டியலில் முன்னேறுவார்கள். கடந்த 2020-ஆம் ஆண்டு 7 பதக்கங்களுடன் 48-வது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது,
இந்திய அணி வென்ற பதக்கங்கள் :
- நீரஜ் சோப்ரா – ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
- இந்திய ஹாக்கி அணி – ஆண்கள் ஹாக்கியில் வெண்கலப் பதக்கம் வென்றது.
- ஸ்வப்னில் குசலே – துப்பாக்கி சுடுதல், 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் (ஆண்கள்) வெண்கலப் பதக்கம் வென்றார்.
- மனு பாக்கர் – 10 மீ ஏர் பிஸ்டல் போட்டியில் தனி நபர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
- மனு பாக்கர் & சரப்ஜோத் சிங் – 10 மீ ஏர் பிஸ்டல் அணியினருக்கான போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றனர்.