கே.எல்.ராகுல் குடியேறவுள்ள புதிய வீட்டிற்கு இத்தனை லட்சம் வாடகையா..!
இந்த ஆண்டு நடைபெறும் 15வது சீசன் ஐபிஎல் தொடரில் கே.எல்.ராகுல் லக்னோ அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஐபிஎல் பஞ்சாப் அணியின் கேப்டனாக விளையாடிஇருந்தார்.
இந்நிலையில் நடிகை அதியாவுடன் கடந்த மூன்று வருடங்களாக ஒன்றாக வசித்து வரக்கூடிய கே எல் ராகுல் தற்போது மும்பையில் ஒரு புதிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாடகைக்கு எடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த அடுக்குமாடி குடியிருப்பு பாந்த்ராவில் உள்ள கார்ட்டர் பகுதியில் உள்ளதாகவும், இதில் நடிகை அதியா ஷெட்டியுடன் கே எல் ராகுல் வசிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கான மாத வாடகை 10 லட்சம் என கூறப்படுகிறது. இந்த குடியிருப்புக்கு கே.எல் ராகுல் தனது காதலியுடன் விரைவில் குடியேறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.