5வது முறையாக ஆசிய சாம்பியன்.! இந்திய ஹாக்கி அணியின் அசாத்திய சாதனை.! 

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் இறுதி போட்டியில் இன்று சீனாவை வீழ்த்தி இந்திய அணி 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

Asia Champions Trophy - Indian Hockey Team

ஹுலுன்பியுர் : ஆசிய சாம்பியன் டிராபி ஹாக்கி தொடரின் இறுதி போட்டி இன்று சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் நடைபெற்றது. இந்த தொடரின் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஹாக்கி அணி நேற்று தென் கொரியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தது.

இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் இந்தியா ஹாக்கி அணி , சீனாவை எதிர்கொண்டது. இதில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதிக்கொண்டிருக்க இந்திய அணி வீரர் ஹர்மன்பிரீத் சிங் அடித்த ஒரு கோலால் 1-0 என்கிற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றிவாகை சூடியது.

இந்த வெற்றியுடன் 5வது முறையாக ஆசிய சாம்பியன் டிராபி தொடரை இந்திய ஹாக்கி அணி வென்று சாதனை படைத்துள்ள்ளது. இந்தாண்டில், பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்றதை அடுத்து இந்திய ஹாக்கி அணி வென்ற அடுத்த மிகப்பெரிய பதக்கம் இதுவாகும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்